காதலன் ஒருவன் தனது காதலியை பட்டப்பகலில் சாலையின் நடுவில் வைத்து வெட்டிச் சாய்த்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இஸ்மாயில் என்ற இளைஞர், அங்குள்ள ஹூப்ளி நகரை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை காதலித்து வந்து உள்ளார்.
 
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து பழகி வந்துள்ளனர். ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, காதலன் இஸ்மாயில் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் 
காணப்பட்டுள்ளது.

இதனால், காதலன் இஸ்மாயிலின் நடவடிக்கைகள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆஷாவுக்கு பிடிக்காமல் போகவே, அந்த இளம் பெண் காதலனிடமிருந்து விலகச் செல்ல தொடங்கி உள்ளார். 

அப்போது, காதலியின் செயலில் மாற்றம் வரவே, விலகலுக்கான காரணம் தெரியாமல் காதலன் இஸ்மாயில் குழம்பித் தவித்து உள்ளார்.

இது தொடர்பாக காதலன் இஸ்மாயில், பல முறை காதலியை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். விலகலுக்கான காரணத்தையும் கேட்டு அடம் பிடித்து உள்ளார். ஆனாலும், காதலை தொடர விரும்பாத காதலி ஆஷா, தனது முடிவில் கடைசி வரை உறுதியாக இருந்து உள்ளார். 

ஒரு கட்டத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காதலன் இஸ்மாயில், “காதலியை நேரில் சந்தித்துப் பேசினால், எப்படியும் தன் காதலி மனம் மாறி விடுவாள்” என்று, நம்பிய இஸ்மாயில், ஒரு வேளை காதலி சம்மதிக்க வில்லை என்றால் என்ன செய்வது என்பதற்கும், அவர் உள்ளுக்குள் வேறு ஒரு திட்டத்துடன் காதலியை தேடி ஹூப்ளிக்கு வந்துள்ளார்.

அதன் படி, காதலியை நேரில் சந்தித்த காதலன் இஸ்மாயில், “தொடர்ந்து காதலிக்க வேண்டும்” என்று, காதலியை வற்புறுத்தி உள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கடும் ஆத்திரம் அடைந்த காதலன் இஸ்மாயில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காதலி ஆஷாவை சரமாரியாக நடு ரோட்டில் வைத்தே வெட்டி உள்ளார். 
 
இதில், இளம் பெண் ஆஷாவின் கழுத்து, முகம், கை, கால்கள் என சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் சாலையின் நடுவே நடந்துகொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். அத்துடன், அதில் சிலர், இந்த காட்சிகளை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். மேலும், சிலர் அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

ஆனால், இளம் பெண்ணை ஒருவரை நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டிச் சாய்ப்பதைப் பார்த்துப் பயந்து போன மக்கள் யாரும் கிட்டக் கூட நெருங்கவில்லை. அப்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர் மட்டும் துணிச்சலாக வந்து இஸ்மாயிலை பிடித்து இழுத்து வந்தார். ஆனால், அதற்குள், அந்த இளம் பெண் அங்கேயே சரிந்து விழுந்தார்.

அப்போது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆஷா மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணிற்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இஸ்மாயிலை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த காதல் கதைகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், இஸ்மாயில் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, பட்டப்பகலில் காதலியை காதலன் கொடூரமாக வெட்டிச் சாய்த்த இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.