தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு - மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு - மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார் - Daily news

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

tamilnadu curfewகடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதோடு ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. பல்வேறு கோணங்களில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு அது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.

Leave a Comment