ஃபோர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலுக்கு ஒவ்வொரு வருடமும் மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் நிலவி வரும். உலக அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் பெண்களை தேர்வு செய்து, தரவரிசைப்படுத்தி ஃபோர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

இந்நிலை இந்த ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பெண்களும் இடம்பிடித்துள்ளனர். 


30 நாடுகளை சேர்ந்த வெவ்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றிய சக்திவாய்ந்த பெண்களை தேர்வு செய்து 2020ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் வெளியிட்டு இருக்கிறார்கள். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கெல் தொடர்ந்து 10வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.  உலகில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில்  தொடர்ந்து பத்தாவது முறையாக முதல்  இடத்தை தக்கவைத்துள்ளார் ஏஞ்சலா மார்கெல்.


இந்த பட்டியலில் அமெரிக்காவில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இடம்பிடித்துள்ளார். கடந்து ஆண்டு பட்டியலில் 34 வது இடத்தை பிடித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  இந்த ஆண்டு 41வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஹெச்.சி.எல் சி இ ஓ ரோஷினி , பயோகான் நிறுவனர் கிரன் மசும்தர் ஷா இந்த பட்டியலில் இருக்கிறார்கள். 


கடந்த ஆண்டு இடம் பிடித்தவர்கள் தொடர்ந்து இந்த முறையும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருந்தாலும் கூட இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 17 பெண்கள் புதிதாக இடம்பெற்றுள்ளனர் என்ற செய்தி வெளியிட்டு இருக்கிறது ஃபோர்ப்ஸ் இதழ்.