டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரத்தில் இருக்கும் நிலையில் , ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு பாஜக ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறது என்ற சந்தேகம் விவாத பொருளாக மாறியிருக்கிறது.


மொத்தம் 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக பாஜக நடந்துக்கொண்ட விதம்தான் தெலங்கானா மற்றும் தேசிய அரசியலில் பரப்பரப்பாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 


காரணம், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் பட்நாவிஸ், மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, தமிழகத்தின் வானதி சீனிவாசன் என பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்காக ஹைதராபாத்லையே தங்கியிருந்தனர். பாரதிய ஜனதா கட்சி வேரூன்ற தெலுங்கானா மாநிலம் ஒரு சிறந்த வாய்ப்பு என பாஜக தலைமை கணக்கு போடுகிறது.


இதனால் தேவேந்திர பட்னாவிஸ், அமித்ஷா , ஜேபி நட்டா,  யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பரப்பரப்பாக தேர்தலுக்கு வேலை செய்தனர். மறுபக்கம் தெலுங்கானா தனி மாநிலமாக உருவானபோது சந்திரசேகர ராவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூட "ஒரு மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க தலைவர்கள் அத்தனை பேரும் பிரச்சாரம் செய்வது ஏன்?'' என பேசியிருந்தார்.


ஹைதராபாத் நகரத்தில் நான்கு மக்களவைத் தொகுதிகள் மற்றும் 24 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதும் ஹைதராபாத் மாநகராட்சியின் இருக்கிறது. தற்போது ஹைதராபாத் மாநகராட்சியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிங்கு 99 இடங்கள் இருக்கின்றன; அசாதுதீன் ஓவைசி கட்சிக்கு 44 இடங்களில் இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் 5 இடங்கள் மட்டுமே இருக்கின்றன. இதனால் 20 இடங்களை பிடித்தால் கூட அது ஹைதராபாத் நகரத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கானா மாநிலத்திலும் பாஜக வேரூன்ற உதவிகரமாக இருக்கும். இதனால்தான் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலை சாதாரணமான ஒரு தேர்தலாக கருதாமல், கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டது. 


இதனால்  இந்தத் தேர்தலுக்காக தனி தேர்தல் அறிக்கை ஒன்றையே வெளியிட்டுள்ளது பாஜக. மேலும் அசாதுதீன் ஒவைசி  ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் ஒவைசி பெற்று வரும் வளர்ச்சி பாஜகவுக்கு கவலை அளித்து இருக்கிறது. இதனால் ஓவைசியின் வளர்ச்சியை தடுக்க மத அரசியலை கையில் எடுத்து இருக்கிறது பாஜக. ஒவைசியின் வளர்ச்சியை தடுக்க முக்கிய காரணம் அவரின் ஏ.ஐ.எம்.ஐ.எம் 44 இடங்கள் இருப்பது தான் என்கிறார்கள்.


பாஜகவின் தீவிர அரசியல் வியூகம் மற்றும் மத அரசியல் எல்லாம் தாண்டி ஹைதராபாத்தில் மக்களின் முடிவு என்ன என்பது தேர்தல் முடிவில் தான் தெரிய வரும்.