“நா வாங்குற சரக்க குடிச்சிட்டு என் மனைவி சண்டைக்கு வருகிறாள்” என்று, காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு கணவன் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பாகலூர் பாண்டி கொடிகேஹல்லியை சேர்ந்த மேக்ஸி என்பவர், தன்னுடைய மனைவி உடன் வசித்து வருகிறார். 

திருமணத்திற்குப் பிறகு, மகிழ்ச்சியாகவே இவர்களது திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. ஆனால், சமீப காலமாகத் தினமும் வேலைக்குச் சென்று விட்டு, வீடு திரும்பும் மனைவியின் செயல்பாட்டில் பல மாற்றங்கள் இருப்பதாகக் கணவன் கூறுகிறார்.

அதாவது, தினமும் வேலைக்குச் சென்று விட்டு, வீடு திரும்பும் மனைவி, குடி போதையில் வருவதாகவும், இதனால் வீட்டில் இருவருக்கும் சண்டை நடப்பதும் தெரிய வந்துள்ளது.

இப்படியாக, கடந்த 9 ஆம் தேதி, வேலைக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிய மனைவி, குடித்து விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கணவன் மேக்ஸி, மனைவியை கடுமையாகக் கண்டித்து இருக்கிறார். 

அப்போது, “இனிமேல் நீ குடிக்கக்கூடாது” என்றும், இவர் கண்டிஷன் போட்டு இருக்கிறார். இந்த நிலையில், மறுநாள் 10 ஆம் தேதி வழக்கம் போல் கணவன் மேக்ஸி, வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி உள்ளார். அப்போது, அவரது மனைவி வீட்டில் இல்லை. இதனால், சற்று குழப்பம் அடைந்த கணவன் மேக்ஸி, மனைவியின் செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது, அவரது எண் சுவிட்ச்ஆப் என்று வந்து உள்ளது.

இதனால், அங்குள்ள பாகலூர் காவல் நிலையத்தில் “என் மனைவியைக் காணவில்லை” என்று, அவர் புகார் அளித்து உள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில். மாயமான மேக்ஸின் மனைவி அவரின் 
தாயார் வீட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அவரை காவல் நிலையத்தில் அழைத்து வந்து போலீசார் விசாரித்து உள்ளனர்.

அப்போது தான், போலீசாருக்கு உண்மையான விசயம் தெரிய வந்தது.

போலீசாரின் விசாரணையில், கணவன் மேக்ஸி, குடிப்பதற்காகத் தனது வீட்டில் வாங்கி வைக்கும் சரக்கு பாட்டில்களை, அவரது மனைவியே தினமும் எடுத்து குடித்து காலி பண்ணி வந்திருக்கிறார். இதனால், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்து உள்ளது. 

இப்படியான சண்டையில் வாக்கு வாதம் முற்றியதால் தான், அவரின் மனைவி, அவருடைய அம்மா வீட்டிற்குச் சென்று உள்ளார். இதனால், சற்று அதிர்ச்சியடைந்த போலீசார், அவரின் மனைவியை சற்று சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பி வைத்தனர்.

குறிப்பாக, நாள் துாறும் பல வீடுகளில் கணவன், குடித்து விட்டு சித்திரவதை செய்வதாக மனைவி தான், புகார் கொடுப்பது வழக்கம். இப்படியான வழங்கிகளைத் தான் போலீசார் இதுவரை சந்தித்து விசாரித்து வந்தனர். ஆனால், தற்போது முதன் முறையாக மனைவி குடித்துவிட்டு சண்டை போடும் புகாரால் போலீசார் தற்போது குழப்பம் அடைந்து உள்ளனர்.