டோக்கியோ ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உலக முழுவதும் வைரலாகி வருகிறது.

உலகையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் தான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் தொடங்குகிறது. இதனால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

அதே நேரத்தில், ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்ற பாலியல் சம்பவங்கள் குறித்த செய்திகள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வந்து, பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான், டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் ஸ்டேடியத்தில் வைத்து, இளம் பெண் ஒருவரை உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவரான 30 வயதாகும் டாவ்வென்பெக் ரக்மத்துல்லா என்பவர், கடந்த 16 ஆம் தேதி வெள்ளிக் கிழமை, டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் ஸ்டேடியத்திற்கு வந்திருக்கிறார்.

அப்போது, ஜப்பான் நாட்டு பெண்ணான 20 வயது இளம் பெண் ஒருவர் அங்கு வந்திருக்கிறார். இந்த இளம் பெண்ணை, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவரான 30 வயதாகும் டாவ்வென்பெக் ரக்மத்துல்லாவுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அதற்கு காரணம், இவர்கள் இருவரும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக நியமிக்கப்பட்ட பகுதி நேர ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.

அதன் படி, பகுதி நேர ஊழியரான அந்த 20 வயது இளம் பெண்ணை, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர் டாவ்வென்பெக் ரக்மத்துல்லாவுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த காரணத்தால், அவர்கள் இருவரும் ஒலிம்பிக் தொடக்க விழா ஒத்திகை நடைபெற்றதை இவர்கள் இருவரும் பார்க்க வந்திருக்கிறார்கள்.

அப்போது, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் அந்த  ஸ்டேடியத்தில் இருக்கும் பார்வையாளர்கள் இருக்கை அருகே அவர்கள் இருவரம் வந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருந்து உள்ளனர்.

அப்போது, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அந்த 20 வயது இளம் பெண்ணை, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த டாவ்வென்பெக் ரக்மத்துல்லா பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்நாட்டைச் சேர்ந்த டோக்கியோ மெட்ரோபாலிட்டன் போலீசார், இளம் பெண்ணை பலாத்காரம் செய்த அந்த நபரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர் டாவ்வென்பெக் ரக்மத்துல்லாவிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், “என்னுடைய ஆசைக்கு அந்தப் பெண், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், மாறாக என்னை பாலியல் உறவுக்கு அந்த இளம் பெண் ஊக்குவித்தார்” என்றும், கைது செய்யப்பட்ட அந்த உஸ்பெகிஸ்தான் நபர் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட இளம் பெண்ணிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை உறுதி செய்துள்ள டோக்கியோ மெட்ரோபாலிட்டன் போலீஸ் துறை, இது பலாத்கார சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களைக் கூற மறுத்துவிட்டது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக, ஒலிம்பிக் தொடக்க விழா ஒத்திகையைப் பார்க்க வந்த போது, அங்கு பாலியல் பலாத்காரம் சம்பவம் நடைபெற்றுள்ள சம்பவம், மற்ற உலக நாடுகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.