8 முறை அமெரிக்க சாம்பியன் வென்ற இளம் வீரர் ஒருவர், சிட்னி ஒலிம்பிக்கின்போது, தினம் 3 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. அதன் படி, வரும் 23 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கி, அடுத்த மாதம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று வரை இந்த போட்டிகள் நிறைவு பெறுகிறது. அத்துடன், இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்று உள்ளனர். இதில், ஒட்டு மொத்தமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். 

இந்தியா உட்பட ஒட்டு மொத்த உலக நாடுகளும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஆயத்தமாகி வருகின்றன. 

கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இந்த போட்டிகள் நடக்க உள்ள நிலையில், இதற்காக பல்வேறு புதிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த முறை நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க சாம்பியன் வீரர் ஒருவர் நடந்துகொண்ட விதம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

அதாவது, “எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த 1988 ஆம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் காண்டம் வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறப்படுகிறது.

ஆனால், தடகள வீரர்களுக்கு தான் அதிக அளவில் ஆணுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், “தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆட்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதாலும், இப்படியாக பாலியல் உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும்” இது போன்ற போட்டி காலங்களில், அதிக அளவில் வீரர்கள் பாலியல் உடலுறவில் ஈடுபட காரணமாக அமைவதாகவும்  கூறப்படுகிறது.

இப்படியாக, இதே காரணத்தை வலியுறுத்தித் தான், “கடந்த 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் தொடரில், அமெரிக்காவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீர் ப்ராக்ஸ் கிரேர் என்ற இளம் வீரர், ஒரு நாளைக்கு 3 பெண்களுடன் பாலியல் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்” என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈட்டி எறிதல் போட்டியில் மிகச் சிறந்த விளையாட்டு வீரரான ப்ராக்ஸ் கிரேர், அமெரிக்காவில் எட்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்கிற
சாதனையைப் படைத்திருக்கிறார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் தொடரின் போது, காண்டம் அதிக அளவில் கையில் ஸ்டாக் இருந்த காரணத்தால், ஒலிம்பிக் தொடரில் விளையாடுவதை காட்டிலும், தினமும் 3 பெண்களுடன் பாலியல் உறவு கொண்டு விளையாடி இருக்கிறார்” என்று, அவருடன் விளையாடிய சக வீரர் ரியான் லோச்ச்டே கவலைத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் இடம் பெற வில்லை. அதற்கு காரணம், துரதிர்ஷ்டவசமாக சிட்னி ஒலிம்பிக் போட்டியின் போது, அவருக்கு கடைசி ரேநத்தில் எதிர்பாராத விதமாகக் காயம் ஏற்பட்டு, அவர் வெளியேறி விட்டார். 

ஆனால், இந்த முறை கொரோனா தொற்று பரவிலுக்கு இடையே டோக்கியோ ஒலிப்பிக் போட்டிகள் நடக்க உள்ளதால், பல்வேறு புதிய விதிமுறைகள்
கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், உலகம் முழுவதும் கிட்டதட்ட 111 நாடுகளுக்கு மேல் பரவி வரும் புதுவகை டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸானது, ஜப்பான் நாட்டிலும் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. 

இதன் காரணமாக, கொரோனா பாதுகாப்பு ஏற்பாடாக அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் டோக்கியோவிற்கு வருவதற்கு முன்பாக 2 கட்ட பரிசோதனை
மேற்கொண்டு அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என்றும், ஜப்பான் அரசு கூறியுள்ளது.