தமிழக சட்டசபை தேர்தல் மே முதல் வாரத்தில் நடைபெறும் என பிப்ரவரி மாதம் இறுதியில் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட இருக்கிறது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளுக்கும் தயாராகி வருகின்றது. 


இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 29ம் தேதி முதல் மக்களைச் சந்திக்க உள்ளார். இன்று முதல் நாள் பிரசாரம் திருவண்ணாமலையில் நடைப்பெற்றது. அந்த பிரசாரத்தில் பேசிய அவர், ‘’100 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன். கிராம சபை கூட்டங்களில் பெறப்பட்ட அனைத்து குறை மனுகளுக்கும் தீர்வு காணப்படும். நான் தமிழக மக்களின் கண்ணீரை துடைப்பதில் என்றும் அக்கறை கொண்டவன். 


கருணாநிதியை போல் கொடுத்த வாக்குறுதியை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தான் ரூ.7,000 கோடி அளவுக்கு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க திமுகவால் முடியும்.  கடந்த 50 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் நான் செல்லாத கிராமங்களே இல்லை.  விவசாயிகள், நெசவாளர்கள் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது தான் திமுக. திமுக என்பது சாமானியர்களின் இயக்கம்" என்று கூறியுள்ளார்.