நாகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு, திமுக கண்டனம் தெரிவித்து உள்ளது. 

நாகை துறைமுகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், படகில் ஏறி பிரசாரம் மேற்கொண்டார். அதன் பிறகு, கதை திரும்பிய உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். 

அதாவது, “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில், நாகை மாவட்டம், திருக்குவளையில் இருந்து, நேற்று முதல் பிரசாரம் துவங்கியது. இந்த பிரசாரமானது, வரும் மே மாதம் வரை, 100 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன் படி, நேற்று மாலை திருக்குவளையில் இந்த பிரசாரம் துவங்க இருந்தது. இந்த பிரச்சாத்தில் பங்கேற்க திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டு இருந்தார். 

அதே நேரத்தில், தஞ்சை டி.ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா தலைமையில், 10 டி.எஸ்.பி.க்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  

அதன் படி, நேற்று மாலை அங்கு வந்த உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

அதன் தொடர்ச்சியாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பேச முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார், திமுக வின் இந்த பிரசாரத்திற்கு அனுமதி மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால், உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதாக போலீசார் கூறினர். இதன் காரணமாக, திமுக தொண்டர்கள் கூச்சலிட்டு, உதயநிதியை கைது செய்ய விடாமல் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது, போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனாலும், அந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி, உதயநிதி ஸ்டாலினை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவருடன் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பலரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பிறகு, அடுத்த சில மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் 
அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால், அங்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடந்ததே, அப்போது கொரோனா பரவல் பற்றித் தெரியவில்லையா?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், “பீகாரில் மோடி, அமித் ஷா பரப்புரையில் ஈடுபட்டனர் என்றும், தீபாவளிக்குக் கூட்டம் கூடியதே, அப்போதெல்லாம் கொரோனா பரவாதா?” என்றும், கேள்வி எழுப்பிய உதயநிதி, திமுக பரப்புரை செய்தால் மட்டும் தான் கொரோனா பரவல் குறித்து அரசுக்குத் தெரியுமா?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, “அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் அரசியல் பிரசாரம் செய்யலாம். அது மட்டும் சரி, ஆனால், திமுக பிரச்சாரம் செய்தால் அது தவறா” என்று சுட்டிக்காட்டிய திமுக, உதயநிதி கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
 
அதன் தொடர்ச்சியாக, “உதயநிதி நடத்திய ஊர்வலத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், முகக்கவசம் அணியாமல் உதயநிதி பேரணி நடத்துகிறார்” என்றும், அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.