வேலூர் மாவட்டம் பொன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவருக்கு வயது 82. ரைஸ்மில் நடத்திவருகிறார் ரேணுகோபால். கடந்த 2008-ம் ஆண்டு, மனைவி கோமளேஸ்வரி இறந்துவிட்டார். இவருக்கு  மூன்று மகள்களும் மற்றும் கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் என்று மூன்று மகன்களும் உள்ளனர். 

தாய் இறந்த பின்னர், தனியாக கஷ்டப்பட்டு வாழும் வயதான தந்தையை தாங்கள் நன்றாக கவனித்துக் கொள்வதாக சொல்லி அவரது மகன்கள் மூவரும் ரேணுகோபாலை அழைத்து சென்றுயிருக்கிறார்கள். ஆரம்பத்தில் சிலகாலம் அக்கறையாக கவனித்து கொண்டுயிருப்பது போல் நடித்து ரேணுவை நம்ப வைத்திருக்கிறார்கள். இதை நம்பிய ரேணுபோபால், மிச்சம் இருக்கும் காலமும் மூன்று மகன்களும் தன்னை  நன்றாக கவனித்துக்கொள்வார்கள் கைவிட மாட்டார்கள்  என முழுமையாக  நம்பிய ரேணுகோபால், தன் பெயரிலிருந்த கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை 2013-ம் ஆண்டு மூன்று மகன்களுக்கும் பாகம் பிரித்து எழுதிக்கொடுத்திருக்கிறார். 

பிறகு வந்த காலங்களில் தான் மூன்று மகன்களின் உண்மையான முகத்தை தெரிந்துக்கொண்டார். இத்தனை நாள் சொத்துக்காக தான் பொய்யான பாசம் காட்டினார்கள் என நொந்துபோனார் ரேணுகோபால். சாப்பிட உணவுகூடக் கொடுக்காமல் அடித்துத் துன்புறுத்தி உதறி தள்ளியதாகவும் சொல்லிகிறார் அவர். 

சொத்துக்காக பொய்யான பாசம் காட்டி, சொத்துக்களை கிடைத்ததும் தன்னை கைவிட்ட மகன்களிடமிருந்து தன்னுடைய சொத்துகளைத் திரும்ப பெற்றுத் தருமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி வேலூர் சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தார் ரேணுகோபால். சுயநினைவுடன் விரும்பி எழுதிக்கொடுத்ததை திரும்ப பெற முடியாது எனவும் ரேணுகோபாலின் கோரிக்கை மனுவை அதிகாரிகள் கண்டுக்க மாட்டார்கள் எனவும் பலர் ரேணுகோபாலிடம் சொல்லிவந்தனர். 

கூடவே கொரோனா ஊரடங்கு காலமும் சேர்ந்துக்கொள்ளவே, நம்பிக்கை இழந்திருந்தார் ரேணுகோபால். ஆனால் ,வேலூர் சப்-கலெக்டர் இது தொடர்பாக விசாரணையை தொடங்க ஆரம்பித்தார்,  விசாரணையில் சொத்துகள் கிடைக்கப்பெற்ற பின்பு மூன்று மகன்களும், தந்தை என்றோ முதியவர் என்றோ பாராமல் ரேணுகோபாலை அடித்துத் துன்புறுத்தியது தெரியவந்தது.

 இதனால், ”பெற்றோர்-மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டத்தின்படி ” மூன்று மகன்கள் பெயரிலும் எழுதிக்கொடுத்த சொத்துக்களின் செட்டில்மென்ட்  பத்திரத்தை ரத்துசெய்து, சொத்துக்களை மீண்டும் ரேணுகோபாலின் பெயருக்கே கிரயம் செய்தும் கொடுத்திருக்கிறார் சப்-கலெக்டர்.

மேலும் ரேணுகோபாலை நேரில் வரவழைத்து இதற்காக உத்தரவு ஆணையையும் ரேணுகோபாலிடம் கொடுத்தார். நம்பிக்கை இழந்து இருந்த ரேணுகோபால் , சப்
கலெக்ட்டாரின் இந்த அதிரடி செயலால் மிகுந்த மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அடைந்துள்ளார். வயது முதிர்ந்த தந்தையிடம் பாசம் காட்டி நடித்து சொத்துக்களை
வாங்கிய பின் கைவிட்ட மகன்களிடமிருந்து, சொத்துக்களை மீட்டு மீண்டும் தந்தைக்கே ஒப்படைத்த சப்-கலெக்டர் கணேஷ் அவர்களை வேலூர் மக்கள் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் பாராட்டி வருகிறார்கள். 

இந்த சம்பவம் சொத்துக்காக பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு இது ஒரு எச்சரிக்கை. மேலும் சொத்துக்களை பெற்ற பின் பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளிடமிருந்து மீண்டும் சொத்துக்களை மீட்க முடியும் என வேலூர் மாவட்ட அதிகாரிகள் சொல்லிகிறார்கள். 

- கே. அபிநயா