சென்னையில் 29 வயது பெண்ணுக்கு திருமணம் ஆசை காட்டி, 52 வயது நபர் ஏமாற்றியதாக, பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ள சம்பவம், பரபரப்பை 
ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரம் பகுதியில் வசிக்கும் 29 வயது பெண் ஒருவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்து உள்ளார்.

அப்போது, அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு, குரோம்பேட்டையில் வசித்துவரும் 52 வயதான ரகு என்பவருடன், அந்த இளம் ஆசிரியருக்குப் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ரகு, திரைத்துறையில் பணிபுரிந்து வருகிறார். 

அத்துடன், ரகுவின் மனைவி கேன்சர் நோயால் இறந்து விட்டதாகக் கூறி, அந்த இளம் ஆசிரியரிடம் ரகு பழகி வந்து உள்ளார். இவர்களது இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மறி உள்ளது. இதனால், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கி உள்ளனர். இருவருகம் காதலிக்க ஆரம்பித்த நிலையில், அந்த 29 வயது இளம் பெண்ணும், அந்த 52 வயது முதியவரும், சென்னையின் பல இடங்களுக்கு ஒன்றாகச் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, அவர்கள் இருவரும் காதல் ஜோடிகளாக ஊர் சுற்றிய போது, அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த உல்லாச வாழ்க்கை சில காலம் சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் அந்த இளம் ஆசிரியர், கர்ப்பம் அடைந்து உள்ளார்.

இதனால், தனது காதலன் வற்புறுத்தலின் படி, அந்த இளம் பெண் கருக்கலைப்பு செய்து உள்ளார். ஆனால், அதன் தொடர்ச்சியாகவும், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வருவதை கை விட வில்லை. இதனால், அந்த இளம் பெண் பல முறை கருக்கலைப்பு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இனியும் கருக்கலைப்பு செய்ய முடியாது என்று முடிவு செய்த அந்த இளம், “தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி” பல முறை தன் காதலன் ரகுவை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், காதலன் ரகு, பல நாட்கள் இப்படியே காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், இந்த உல்லாச காதலின் போது, ரகு அந்த இளம் பெண்ணிடம் 2 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி, தொடர்ந்து வற்புறுத்தியதால், ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த காதலன் ரகு, தற்கொலைக்கு முயல்வதாகக் கூறி மன நலம் பாதிக்கப்பட்ட சான்றிதழைப் பொய்யாகப் பெற்றுக்கொண்டு, தன்னுடைய காதலிக்கு கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார். இதனால், பயந்து போன அந்த இளம் பெண், தாம் ஏமாற்றப்பட்டதை நன்கு உணர்ந்து உள்ளார்.

இதனையடுத்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண், இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அங்கிருந்த காவல் ஆய்வாளர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சமாதானம் செய்து அனுப்பி வைத்து உள்ளனர்.

இதனால் காதலன் ரகுவின் உறவினர் பிரபாகரன், காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், 52 வயது முதியவரைத் திருமணம் செய்துகொள்ள அடம் பிடிக்கும் 29 வயது பெண்ணுக்கு, அவரது உறவினர்கள் பலரும் அறிவுரை கூறி வருவதாகவும் 
கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.