'தைவானிலிருந்து மருத்துவர்களை அழைத்து வருவோம்'- உரிய நேரத்தில் மருத்துவ சேவை.. Stபிரிட்டோ அகாடமி Drவிமலா ராணியின் ஸ்பெஷல் பேட்டி!

'தைவானிலிருந்து மருத்துவர்களை அழைத்து வருவோம்'- உரிய நேரத்தில் மருத்துவ சேவை.. Stபிரிட்டோ அகாடமி Drவிமலா ராணியின் ஸ்பெஷல் பேட்டி! - Daily news

செயின்ட் பிரிட்டோ அகாடமி செயலாளர் டாக்டர்.விமலா ராணி அவர்கள் தைவானில் இருந்து மருத்துவர்கள் குழுவை அழைத்து வந்து உரிய நேரத்தில் செய்யும் மருத்துவ சேவைகள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார். தமிழ்நாட்டில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் செயின்ட் பிரிட்டோ அகாடமி என்றும் அழியாத கல்விச் செல்வத்தை மிகச் சிறப்பாக வழங்கி வருகிறது. இந்த செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளராக விளங்குபவர் மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்கள். தனது கணவரும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் கெர்ரி இன்டெவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியை நிறுவிய டாக்டர் விமலா ராணி பிரிட்டோ அவர்கள் VKAN-V சொல்யூஷன்ஸ் தலைவராகவும், கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் இயக்குநராகவும், எஸ்தெல் ஹோட்டல் & ரிசார்ட்ஸின் நிர்வாக இயக்குநராகவும், எஸ்தெல் ஹோம்ஸின் இயக்குநராகவும் திகழ்கிறார். 

கடின உழைப்பின் அடையாளமாய் விளங்கும் மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்களின் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த Dr.விமலா ராணி அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசிய போது, “இதைத் தான் செய்ய வேண்டும், இந்த வேலையை தான் செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மையை உடைத்து எறிந்து வண்டி ஓட்டவும் வாங்கள் என்று சொல்லி ஓட்டுனர் அட்டையையும் வாங்கிக் கொடுக்கிறீர்கள்.. கிராமங்களில் சென்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதாக இருக்கட்டும், பெண்களுக்கு டைலரிங் சொல்லிக் கொடுப்பதாக இருக்கட்டும் நோயாளிகளுக்கு உதவி செய்வதாக இருக்கட்டும்... இவர்களுக்கு மட்டும் தான் இந்த உதவிகள் சென்றடைய வேண்டும் என்கிற  என்னத்தோடு செய்கிறீர்களா இல்லை எப்படி?” எனக் கேட்டபோது, 

“இது எப்படி என்று பார்த்தீர்கள் என்றால் நாங்கள் எப்பொழுதுமே மருத்துவ உதவிகள் செய்து கொண்டு தான் இருந்திருக்கிறோம். மருத்துவ கண்காணிப்பின் பிறகு எங்களுக்கு தகவல்கள் கொடுப்பார்கள்... கடந்த ஐந்து வருடங்களாக எனக்கு தைவானில் மருத்துவ தொடர்பு இருக்கிறது. அதன்மூலம் தைவானிலிருந்து மருத்துவர்களை அழைத்து வருவோம். இங்கு வந்து இந்திய மருத்துவக் குழுவுடன் சேர்ந்து மருத்துவ கண்காணிப்பின் பின் தெளிவான குறிப்பிடல்களை தருவார்கள். அதுதான் எங்களுக்கு அந்த உடல் சார்ந்த பிரச்சனைகளை குறித்து ஒரு தெளிவான ஆலோசனையை தரும். உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம் எது ? அந்த பாதிக்கப்பட்ட நபருக்கு தேவைப்படுகிற சிகிச்சை எது என்றெல்லாம்... எனக்குத் தெரிந்த ஒரு குழந்தைக்கு இதயத்தில் ஒரு ஓட்டை இருந்தது... யாருக்கும் தெரியவில்லை, அந்த குழந்தையுடைய தாய் தந்தைக்கும் அது தெரியவில்லை... ஆனால் எனக்கு அது சரியான நேரத்தில் தெரிந்ததனால் தேவையானவற்றை செய்து அந்த குழந்தையை சரியான நேரத்தில் என்னால் காப்பாற்ற முடிந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது... அது என்னால் மறக்க முடியாது.” என்றார். தொடர்ந்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் தனது பயணத்தின் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்ட டாக்டர்.விமலா ராணி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம். 

Leave a Comment