லேபிள் வெப் சீரிஸ்: தீபாவளி வெளியீடாக ஜெய் - அருண் ராஜா காமராஜ் கூட்டணியில் வரும் அதிரடி படைப்பின் புது ட்ரெய்லர் இதோ!

ஜெய் - அருண் ராஜா காமராஜ் கூட்டணியின் லேபிள் வெப் சீரிஸின் புது ட்ரெய்லர்,jai arunraja kamaraj in label web series new trailer out now | Galatta

முதல்முறையாக வெப் சீரிஸில் களமிறங்கி இருக்கும் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அதிரடியான லேபிள் வெப் சீரிஸின் புது ட்ரெய்லர் வெளியானது. ஏற்கனவே நடிகர் ஜெய் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்த ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் நல்ல ரொமான்டிக் காமெடி வெப் சீரிஸாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டடித்ததை தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரில்லர் வெப் சீரிஸாக வெளிவர தயாராகி இருக்கிற வெப் சீரிஸ் தான் லேபிள். கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி படங்களை இயக்கிய பிரபல இயக்குனராகவும், பாடகர் நடிகர் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் திகழும் அருண் ராஜா காமராஜ் இந்த லேபிள் வெப் சீரிஸை எழுதி இயக்கியிருக்கிறார். 

விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் கதை களத்தில் அமைந்திருக்கும் இந்த லேபிள் வெப் சீரிஸில் நடிகர் ஜெய் உடன் இணைந்து மாஸ்டர் மகேந்திரன் மற்றும் தன்யா ஹோப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் ஹரிசங்கர் நாராயணன், இளவரசு, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீமண், சரண்ராஜ், DRK.கிரண், ரமேஷ் திலக் மற்றும் ஜஸ்பர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த லேபிள் வெப் சீரிஸ்க்கு சாம்.CS இசையமைத்திருக்கிறார்.இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 10 ஆம் தேதி முதல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த லேபிள் வெப் சீரிஸ் வெளியாகிறது. வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கும் இந்த லேபிள் வெப் சீரிஸின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளிவந்து ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த தீராக் காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஜெய் நடிப்பில் வெளிவர இருக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் ஜெய் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாக்கி இருக்கும் பிரேக்கிங் நியூஸ் என்னும் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கிறது. முன்னதாக தனது 32 வது திரைப்படமாக உருவாகும் 1 KM என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் ஜெய் தொடர்ந்து அறம் படத்தின் இயக்குனர் கோபி நயனார் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்திலும் இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகும் மற்றொரு புதிய படத்திலும் நடிக்கிறார் இது தவிர நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமாக உருவாகி வரும்  அன்னபூரணி திரைப்படத்திலும் நடிகர் ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று முன்பு வெளிவந்த நடிகர் ஜெய் இயக்குனர் அருண் ராஜா காமராஜின் லேபிள் வெப் சீரிஸின் புதிய ட்ரெய்லர் இதோ…