தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து மரியான், மெட்ராஸ், கபாலி, பரியேறும் பெருமாள், வடசென்னை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, வினோதய சித்தம், ரைட்டர், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் ஹரிகிருஷ்ணன். இந்த வரிசையில் மீண்டும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் தங்கலான் திரைப்படத்திலும் மிக முக்கிய வேதத்தில் நடிகர் ஹரி கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.
1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நேற்று நவம்பர் 1ம் தேதி வெளிவந்த தங்கலான் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக திரைப்படம் உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஹரி கிருஷ்ணன் நமக்கு கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நிறைய சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “சீயான் விக்ரம் அவர்கள் தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவில் பேசும்போது ராவணன் ஐ படங்களோடு ஒப்பிடும்போது இது மிகவும் கடினமாக இருந்தது என தெரிவித்திருந்தார். அவரை முதல் முறை அந்த லுக்கில் பார்த்த போது உங்களுக்கு எப்படி இருந்தது?” எனக் கேட்ட போது, “அதிர்ந்துவிட்டேன் என்னடா இப்படி இருக்கிறாரே என அதிர்ந்துவிட்டேன். நான் கொஞ்சம் ஒர்க் பண்ணுவேன் டைம் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்னதாக ஏதாவது வொர்க் பண்ணுவேன் பல்லில் என்ன பண்ணலாம். கண்ணில் என்ன பண்ணலாம் என்றெல்லாம் வொர்க் பண்ணுவேன். அவரைப் பார்த்தவுடன் என்னடா இது இவர் இவ்வளவு வொர்க் பண்ணிட்டு வந்திருக்கிறார் என இருந்தது. ஒரு இடத்தில் அவரைப் பார்த்து நடுக்கம் வந்துவிட்டது. என்னடா இப்படி இருக்கிறார் என்று, “ஹாய் கண்ணா” என்று சொன்னார் பயங்கரமாக இருந்தது. நான் அவரோடு இருந்தால் அவருடன் இணைந்து பணியாற்றும் போது அவரை பார்த்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். அதையெல்லாம் நான் பயன்படுத்திக் கொள்வேன். இப்படி எல்லாம் நடிகர்கள் வொர்க் பண்ணுகிறார்கள் எனவே இந்த மாதிரியான நடிகர்கள் உடன் எல்லாம் நாம் இருக்கும்போது ஒரு பயங்கரமான கிளாஸாக இருக்கிறது. கற்றுக் கொள்ளலாம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்கலாம். சார் இப்படி பண்ணுகிறார் அப்படி பண்ணுகிறார்... என பார்த்து கற்றுக் கொள்ளலாம்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் ஹரிகிருஷ்ணனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.