இந்தியன் 2 INTRO: கமல்ஹாசனுக்காக இணையும் ரஜினிகாந்த், மோகன்லால், ஆமீர் கான், SS ராஜமௌலி, கிச்சா சுதீப்! அதிரடி அறிவிப்பு இதோ

கமல்ஹாசனின் இந்தியன் பட டீஸருக்காக இணையும் நட்சத்திரங்கள்,rajinikanth aamir khan and 3 stars will release indian 2 glimpse | Galatta

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் டீசரை வெளியிடுவதற்காக இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், ஆமீர் கான், SS ராஜமௌலி, கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் உலக நாயகனின் இந்தியன் 2 பட முதல் GLIMPSE வீடியோவாக இந்தியன் 2 AN INTRO என்ற டீசர் வீடியோ நாளை நவம்பர் மூன்றாம் தேதி வெளி வருகிறது. இந்த இந்தியன் 2 AN INTRO - GLIMPSE வீடியோவை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிடுகிறார் அதே போல் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் தெலுங்கில் இயக்குனர் SS.ராஜமௌலி ஹிந்தியில் நடிகர் ஆமீர் கான் மற்றும் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிடுகின்றனர் என்ற அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் உடன் 2வது முறையாக இணைந்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த  பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வருகிற திரைப்படம் தான் இந்தியன் 2. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டு உலகநாயகன் கமல்ஹாசன் டப்பிங் ஈடுபடும் வீடியோக்கள் வெளிவந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த கடந்த 2022 ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து உலக நாயகன் நடிப்பில் வெளிவர இருக்கின்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. 

அந்த வகையில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் கல்கி திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் அமிதாப்பச்சன் இதன் இணைந்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக துணிவு படத்திற்குப் பிறகு இயக்குனர் H.வினோத் இயக்கும் KH233 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தலைவன் இருக்கின்றான் என தலைப்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை. அதைத் தொடர்ந்து நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் KH234 படத்தில் உலக நாயகன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2 AN INTRO-வை வெளியிடுவதற்காக இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இணைந்திருப்பதாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ...
 

Their friendship that grew over the years has only got stronger with time! 🤗✨ #SuperstarForUlaganayagan 🤩

'Superstar @rajinikanth will release 'Ulaganayagan' @ikamalhaasan & @shankarshanmugh's INDIAN-2 AN INTRO tomorrow at 5:30 PM 🕠#Indian2 🇮🇳 @anirudhofficialpic.twitter.com/SumRpTnKEH

— Lyca Productions (@LycaProductions) November 2, 2023
 

When two magnificent forces meet 🔥🤝🌊 We are surely in for a treat! 🤗✨ #SSRForUlaganayagan 🤩

Magnum opus director @ssrajamouli will release 'Ulaganayagan' @ikamalhaasan & @shankarshanmugh's INDIAN-2 AN INTRO tomorrow at 5:30 PM 🕠#Indian2 🇮🇳 @anirudhofficialpic.twitter.com/05av1BUK50

— Lyca Productions (@LycaProductions) November 2, 2023

When two magnificent forces meet 🔥🤝🌊 We are surely in for a treat! 🤗✨ #SSRForUlaganayagan 🤩

Magnum opus director @ssrajamouli will release 'Ulaganayagan' @ikamalhaasan & @shankarshanmugh's INDIAN-2 AN INTRO tomorrow at 5:30 PM 🕠#Indian2 🇮🇳 @anirudhofficialpic.twitter.com/05av1BUK50

— Lyca Productions (@LycaProductions) November 2, 2023

The 'Baadshah' across territories is here for you! 😎💥 #BaadshahForUlaganayagan 🤩

'Baadshah' @KicchaSudeep will release 'Ulaganayagan' @ikamalhaasan & @shankarshanmugh's INDIAN-2 AN INTRO tomorrow at 5:30 PM 🕠#Indian2 🇮🇳 @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasadpic.twitter.com/Hse2FJ9lgR

— Lyca Productions (@LycaProductions) November 2, 2023

Mr. IGR Maraar 🚨 is on call ✨ No better way to 'Complete' the announcement #TheCompleteActorForUlaganayagan 🤩

'The Complete Actor' @Mohanlal will release 'Ulaganayagan' @ikamalhaasan & @shankarshanmugh's INDIAN-2 AN INTRO tomorrow at 5:30 PM 🕠#Indian2 🇮🇳 @anirudhofficialpic.twitter.com/m8LfmrhSjm

— Lyca Productions (@LycaProductions) November 2, 2023