திருப்பத்தூர் அருகே 9 ஆம் வகுப்பு மாணவியை 2 குழந்தைகளின் தந்தை பாலியல் பலாத்காரம் செய்து 8 மாதம் கர்ப்பமாக்கிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அடுத்த சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த 30 வயதான எட்வின், அந்த பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். எட்வினின்றகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளன.

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்காரர் வீட்டிற்கு எட்வின் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அந்த வீட்டில், தனது உறவுக்காரரின் 13 வயது சிறுமி உள்ளார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்ப படித்து வருகிறார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், அடிக்கடி அந்த வீட்டிற்கு வரும் எட்வின், சிறுமியிடம் ஆசை ஆசையாகப் பேசி தன் வலையில் வீழ்த்தி உள்ளார். அதன் பிறகு, சிறுமியிடம் காம வேட்டை நடத்தி உள்ளார் எட்வின். 13 வயது சிறுமியை என்னவெல்லாம் பேசி கவுக்க முடியுமோ, அதை எல்லாம் பேசி தன் மன்மத வலையில் வீழ்த்திய எட்வின், சிறுமியைப் பல முறை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். ஆனால், சிறுமியின் பெற்றோர்களிடம் இது எதுவுமே தெரியாதது போல், இயல்பாகப் பேசி பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமிக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறுமியை அந்த பகுதியில் உள்ள

அடுக்கம் பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி உள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் இது குறித்து விசாரித்து உள்ளனர்.

அப்போது, சிறுமி உறவினர் எட்வின் குறித்து, எல்லாவற்றையும் கூறி அழுதுள்ளார். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், எட்வின் மீது வேலூர் மாவட்ட சமூக நலத்துறையில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், அது உண்மை என்பதை உறுதி செய்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து, எட்வினைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், எட்வின் அனைத்து தவறுகளையும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே,  9 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை நெருங்கிய உறவினரான 2 குழந்தைகளின் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து, 8 மாதம் கர்ப்பமாக்கிய சம்பவம், திருப்பத்தூர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.