வாலி, குஷி திரைப்படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான  S.J.சூர்யா நியூ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து கதாநாயகன் ,வில்லன் என பல முக்கிய கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் S.J.சூர்யா. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி, அட்லி இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் என தனது வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

S.J.சூர்யா கடைசியாக கதாநாயகனாக நடித்த மான்ஸ்டர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள மாநாடு திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இதையடுத்து S.J.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் கடமையை செய் திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

முத்தின கத்திரிக்கா திரைப்படத்தை இயக்கிய வெங்கட்ராகவன் இயக்கும் கடமையை செய் திரைப்படத்தில் தடம் திரைப்படத்தின் இசை அமைப்பாளர் அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் ,S.J.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையை செய் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் T.R.ரமேஷ் அவர்களின் கணேஷ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஜாகீர்உசேன் அவர்களின் நஹர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் பாடல் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியானது. 

கடமையை செய் திரைப்படத்தில் உருவாகியிருக்கும் வாட்ச்மேன் என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் அறிவுமதி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெங்கட்ராகவன் இயக்கத்தில் S.J.சூர்யா நடிப்பில் உருவாகும் கடமையை செய் படத்தில் நான் எழுதிய “வாட்ச்மேன்”களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இப்பாடல் மிகுந்த கவனம் பெறும் என்று என் நம்பிக்கை பாடல் ஒலிப்பதிவுக்கு நேரில் செல்ல இயலவில்லை எனினும் பாடல் சிறப்பாக வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.