கேரளாவில் 17 வயது சிறுமி 3 வது முறையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மிகவும் ஏழ்மை நிலையில் வளர்ந்து வந்தார். அத்துடன், அந்த சிறுமி, அங்குள்ள ஒரு அரசப் பள்ளியில் படித்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு அந்த சிறுமி தன்னுடைய 13 வயதில் அடுத்தடுத்து 2 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரியவந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த குற்றச்சாட்டின் படி, வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அத்துடன், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியை, அங்குள்ள நிர்பயா குழந்தைகள் நல மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த சிறுமி கடந்த சில மாதங்கள் வரை தங்கியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, அடுத்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், அச்சிறுமியை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
 
குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திலிருந்து வெளியே வந்த அச்சிறுமிக்கு, மீண்டும் பாலியல் பலாத்காரம் சம்பவம் நடந்து உள்ளது, அனைவரையும் கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அந்த மாநிலம் முழுவதும் இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து அங்குள்ள காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், “குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திலிருந்து வெளியே வரும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், அந்த மாநிலத்தில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, அந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையை உறுதி செய்துள்ளதாகவும்” குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதே நேரத்தில், “குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திலிருந்து வெளியே வரும் பாதிக்கப்பட்ட சிறுமிகள், கண்காணிக்கப்படுகிறார்களா? அவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறதா? என்று, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம், அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.