கன்னியாகுமரி அருகே 7 வயது சிறுவனை தாயின் காதலன் உடல் முழுவதும் கடித்து கொதறிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 34 வயாபன சசிகலா, தன் கணவர் மற்றும் தனது 3 குழந்தை உடன் வாழ்ந்து வந்தார். இதில், அவருக்கு முதல் குழந்தை பெண் குழந்தையும், மற்ற இருவரும் ஆண் குழந்தைகள் ஆவர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சசிகலாவின் கணவன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக சசிகலா, தனது 3 குழந்தைகளில் மூத்த மகள், மூத்த மகன் ஆகியோர் சசிகலாவின் சகோதரியின் பராமரிப்பில் வசித்து வந்தனர். இதனால், தனது இளைய மகனான 7 வயது மகனுடன் சசிகலா காஞ்சாம்பாறை பகுதியில் தனிமையில் வசித்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த முருகனுடன் சசிகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம், அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகப்படுத்தியதால், முருகனும் - சசிகலாவும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் தொடங்கினர். அப்போது, அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அந்த 7 வயது சிறுவன் அறியாமல் விளையாட்டுத் தனமாக செய்யும் செயலால், காதலன் முருகன் சசிகலாவின் 7 வயது மகனை துன்புறுத்துவதை வழக்கமா வைத்திருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் அந்த சிறுவன், தன்னை அறியாமல் விளையாட்டுத் தனமாக ஏதோ செய்ததாகத் தெரிகிறது. இதில் கடும் ஆத்திரமடைந்த தாயின் காதலன் முருகன், அந்த சிறுவனின் முதுகு, கை, காலின் தொடைப் பகுதிகளில் கொடூரமாகக் கடித்துத் துன்புறுத்தி உள்ளான். இதனால், அந்த 7 வயது சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்து உள்ளார். 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் திரண்டு வந்து பார்த்து உள்ளனர். அப்போது, சிறுவன் உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்து உள்ளன. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், சிறுவனை கொடுமைப்படுத்துவது குறித்து அங்குள்ள நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், முருகனிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அத்துடன், போலீசார் சிறுவனை பார்த்து உள்ளனர். அப்போது, சிறுவனின் உடல் பகுதியில் பல இடங்களில் முருகன் கடித்து வைத்ததில் ரத்தக் காயம் இருந்தது. இதனையடுத்து, சிறுவனை மீட்ட போலீசார், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், சிறுவனுக்கு சிகிச்சை முடிந்த பிறகு, சிறுவனை காப்பகத்தில் சேர்க்க குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

குறிப்பாக, போலீசாரிடத்திலிருந்து முருகன் தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவனை பிடிக்க போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.