“தொங்கு சட்டசபை அமைந்தால் அதிமுக - திமுக இருவரில் என் ஆதரவு யாருக்கு” என்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து உள்ளார். 

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துக்கொண்டு இருக்கிறது. இதனால், நட்சத்திர வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தங்களது  கருத்துக்களையும் தொடர்ந்து தெரிவித்த வருகின்றனர்.

அந்த வகையில், ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், “ தமிழகத்தில் நீண்ட காலமாக உள்ள அதிமுக - திமுக முடிவைக் காணவே மக்கள் நீதி மய்யம் வந்திருக்கிறது” என்று, குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “ஒரு கட்சி ஒரு விஷ ஊர்வனம் அதன் தலை போய்விட்டது. ஆனால், அதன் வால் மட்டும் இருக்கிறது. மற்றொன்றுக்கு ஒரு தலை இருக்கிறது.  இது ஒரு உயிருள்ள மற்றும் உதைக்கும் விலங்கு” என்று, அதிமுக - திமுகவை சுட்டிக்காட்டிப் பேசி உள்ளார்.

அத்துடன், “தேர்தலுக்குப் பிறகு எங்கள் திட்டம் என்பது, “என்ன நடந்தாலும், எல்லாவற்றிற்கும் நாங்கள் தயாராக இருப்பதால், அதைப் பற்றி பேசுவதில்  உடன்பாடு இல்லை என்றும், தமிழக அரசியலின் வரைபடத்திலிருந்து மக்கள் நீதி மய்யத்தை இனி அகற்றவே முடியாது” என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும், “இது எங்கள் வாழ்க்கையின் முதல் 3 ஆண்டுகளில் மிக முக்கியமான கட்டம் என்றும், ஊழல்வாதிகளுக்கு எதிரான விமர்சனங்களுக்கு அஞ்சாதவர்கள் என் எதிரிகள்” என்றும், தற்போதைய அதிமுக - திமுகவை விமர்சித்து நடிகர் கமல் பேசி உள்ளார்.

குறிப்பாக, “எடப்பாடி பழனிசாமி - மு.க. ஸ்டாலினுக்கு இடையில் ஒரு முதலமைச்சரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றால், யாரைத் தேர்வு செய்வீர்கள்” என்று, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய கமல், “நான் தேர்வு செய்ய மாட்டேன். இவை மட்டுமே தேர்வுகள் என்றால், நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டியதில்லை” என்றும், வெளிப்படையாகவே தெரிவித்தார்.

மிக முக்கியமாக, “தமிழக தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டசபை அமைந்ததால் புதிய அரசை எந்த கட்சியை நீங்கள் ஆதரிப்பீர்கள்?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்குப் பதில் அளித்து பேசிய கமல், “மக்களை வேறொரு தேர்தலை சந்திப்பதற்குப் பதிலாக நாங்கள் அவர்களுக்கு உதவ வேண்டியிருக்கும். ஆனால், தேர்வு செய்ய இரண்டு தீமைகள் இருந்தால், நாங்கள் மறு தேர்தலுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றும், வெளிப்படையாகவே தனது கருத்தை முன் வைத்தார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமலின் இந்த பேட்டி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.