“மு.க. அழகிரியும் விரைவில் பாஜகவில் இணைகின்ற நாளை நாங்கள் உருவாக்கி காட்டுவோம்” என்று, பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது
திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் திமுக கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஆட்சியை பிடித்து சிறப்பாக ஆட்சி செய்துகொண்டு வருகிறது.

இப்படியான சூழ்நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, கடந்த காலங்களில்
திமுகவின் முக்கிய புள்ளியாக வலம் வந்தார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, அவர் மத்திய அமைச்சராகவும் இருந்து வந்தார்.

ஆனால், மு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு, திமுகவிற்குள் நடந்த உட்கட்சி பூசல் காரணமாக, மு.க.அழகிரி, கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்து
வருகிறார்.

இதனையடுத்து, தமிழகத்தில் நடந்து முடிந்த்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, “மு.க. அழகிரி பாஜகவில் சேரப்போகிறார் என்றும், நடிகர் ரஜினிகாந்தின் கட்சியில்
சேரப்போகிறார்” என்றும், செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி்யது. ஆனால், அது எதற்கும் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்த மு.க. அழகிரி, தேர்தல்
நேரத்திலும், அதற்கு பிறகும் தற்போது வரை அமைதியாகவே இருந்து வருகிறார்.

இந்த சூழலில் தான், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில்
தாமரை மலரப்போகும் நாள் உருவாக போகிறது. அந்த நாள் வரப்போகிறது” என்று, குறிப்பிட்டார்.

“நாம் ஒரு நாளை உருவாக்க போகிறோம் என்றும், விரைவில் மதுரையில் இருந்து அழகிரியும் பாஜகவில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம்”
என்றும், அவர் பகிரங்கமாக வெளிப்படையாகவே பேசினார்.

“தற்போது, 4 இடங்களை பெற்றுள்ள நாம், 140 இடங்கள் பெறும் வரை அயராது உழைக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

பின்னர், திருப்பூர் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது சட்டமன்ற தேர்தலில் 4
பேரை வெற்றி பெற வைத்ததார் என்றும், அவர்கள் 4 பேரும் திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் குறைகளை சுட்டிக்காட்டி பேசி வருகிறார்கள்”
என்றும், கூறினார்.

மேலும், “தமிழகத்தில் திராவிடம் என்கிற மாயையை நிச்சயம் உடைத்துக் காட்டுவோம் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி
பெறுவோம்” என்றும், அவர் பேசினார்.

இந்த நிகழ்சிசியல், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.