தமிழகத்தில் 3 வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி உள்ள நிலையில், பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது, “தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு மற்றும் அது தொடர்பான தடுப்பு பணிகள்; அதே போல், சாத்தான் குளம் விவகாரம், உள்ளிட்ட விசயங்கள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, ஆளுநரை சந்தித்தித்து எடுத்துரைத்தார்” என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மையம் கொண்டு தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று, துளியும் குறையாமல் தன் வீரியத்தை நாளுக்கு நாள் தொடர்ந்து விரிவு படுத்திக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும், தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில், கடந்த 3 நாட்களாக 4 ஆயிரம் பாதிப்புகளைத் தமிழகம் சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை 1 ஆம் தேதி 3,882 பாதிப்புகளும், ஜூலை 2 ஆம் தேதி 4,270 பாதிப்புகளும், ஜூலை 3 ஆம் தேதி 4,389 பாதிப்புகளும் பதிவாகி வந்த நிலையில், இன்று 4 வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியது.

அதன் படி, தமிழகத்தில் இன்று மிகச் சரியாக  4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்யைானது 1,02,721 லிருந்து 1,07,001 ஆக உயர்ந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை கூறியுள்ளது.
   
அத்துடன், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளனர். இதன் காரணமாக, தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,385 லிருந்து 1,450 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் இன்று ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 66,538 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சென்னையில் மட்டும் இன்று 37 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னையின் மொத்த கொரோனா உயிரிழப்பு 1033 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 24,195 ஆக உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 41,309 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று இன்று சற்று அதிகரித்துக் காணப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் 2,438 பேருக்கு கொரோனா தொற்று இன்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, மதுரையில் இன்று ஒரே நாளில் 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மதுரையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,776 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில், கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது 57 ஆக அதிகரித்துள்ளது. 

கோவையில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாவட்டத்தில் இந்த 67 எண்ணிக்கையே, அதிகபட்ச பாதிப்பாகப் பதிவாகி உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த மாவட்டத்தில் 45 பாதிப்பு எண்ணிக்கையே அதிகபட்சமாக இருந்தது.

மேலும், இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பார்க்கும்போது..

சென்னை - 1,842
செங்கல்பட்டு - 215
மதுரை - 352
திருவள்ளூர் - 251
தி.மலை -173
ராமநாதபுரம் - 149
காஞ்சிபுரம் - 134
ராணிப்பேட்டை - 104
விருதுநகர் - 100
வேலூர் - 85
திருச்சி- 83
கடலூர் - 75
சேலம் - 70
குமரி - 69
கோவை - 67
தூத்துக்குடி - 64
நெல்லை- 61
விழுப்புரம் - 57
விழுப்புரம் - 57
தேனி - 54
திருப்பத்தூர் - 48
சிவகங்கை - 48
புதுக்கோட்டை - 42
திண்டுக்கல் - 22
க.குறிச்சி -21
தென்காசி - 17
ஈரோடு - 16
திருவாரூர் - 11
நாகை - 6
தர்மபுரி -6
கிருஷ்ணகிரி - 4
தஞ்சை - 3
திருப்பூர் - 2
நீலகிரி - 5
நாமக்கல் - 4
அரியலூர் - 3 
கரூர் - 3

என்ற அளவில் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இன்று கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மாவட்டம் வாரியாக பார்க்கும் போது..

சென்னை - 37
மதுரை - 6
செங்கல்பட்டு - 5
காஞ்சிபுரம் - 4
திருவள்ளூர் - 2
ராமநாதபுரம் - 2
வேலூர் - 2 
திருவண்ணாமலை - 2
நெல்லை - 1 
ராணிப்பேட்டை - 1
சேலம் - 1
குமரி - 1
புதுக்கோட்டை - 1

என்ற அளவில் கொரோனா உயிரிழப்பு இன்று பதிவாகி உள்ளது.

முக்கியமாக, தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றில் இருந்து 2,214 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், ஒட்டுமொத்தமாக கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 60,592 ஆக உயர்ந்து உள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை சுட்டிக்காட்டி உள்ளது.