கள்ளக் காதலியின் வீட்டில் இன்னொரு கள்ளக் காதலன் இருந்ததால், ஆத்திரமடைந்த கள்ளக் காதலன் ஒருவன், காதலியின் 5 வயது மகளை கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது 5 வயது பெண் குழந்தை ஒருவருடன் வசித்து வந்துள்ளார். அப்போது, அந்த இளம் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில், அந்த இளைஞரின் பழக்கம் பிடிக்காமல், அந்த இளைஞரை அந்த பெண் தொடர்ந்து தவித்து வந்துள்ளார். இது குறித்து அந்த இளைஞர் விளக்கம் கேட்டும், அவர் சரிவர எதுவும் பேசாமல் முற்றிலுமாக அவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சல் அடைந்த இளைஞர், இது குறித்து, அந்த பெண்ணிடம் விளக்கம் கேட்டு விட வேண்டும் என்ற முடிவோடு, மீண்டும் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். 

அப்போது, அந்த பெண்ணின் 5 வயது பெண் குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. இதனையடுத்து, வீட்டின் உள்ளே சென்று அவர் பார்த்துள்ளார். அங்கு, வேற ஒரு கள்ளக் காதலனுடன், அந்த பெண் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தார். இதனைப் பார்த்து முதல் கள்ளக் காதலன், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த 2 வது கள்ளக் காதலன் ஏற்கனவே இருவருக்கும் பொதுவான நன்கு அறிமுகம் ஆன நபர் ஆவார். 

தனது காதலி, தன்னுடனும் கள்ளக் காதலில் இருந்துவிட்டு, அதே நேரத்தில் வேற ஒரு ஆணுடனும் கள்ளக் காதல் வைத்திருந்ததால், கடும் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி உள்ளார். இதனையடுத்து, வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த அந்த 5 வயது சிறுமியின் கழுத்தில், அங்குக் கிடந்த பிளாடால் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர், அதே கோபத்தில் வீட்டின் உள்ளே தனக்குப் போட்டியாக வந்த மற்றொரு கள்ளக் காதலனையும் பிளாடால் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். அதன் பிறகு, தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கும் அவர் முயன்றுள்ளார்.

இதில், கழுத்து அறுபட்ட சிறுமி, வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பகத்கதினர் ஓடி வந்து பார்த்தபோது, சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அப்போது தான், அந்த பெண் ஒரே நேரத்தில் 2 ஆண்களுடன் கள்ளத் தொடர்பில் இருந்தது அந்த பகுதியினருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு வேக வேகமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு ஓடி உள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வலியிலேயே சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், படுகாயம் அடைந்த கள்ளக் காதலர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள இரு வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், ஒரே நேரத்தில் 2 ஆண்களுடன் அந்த பெண், கள்ளத் தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொண்டார். 

இதனிடையே, கள்ளக் காதலியின் வீட்டில் இன்னொரு கள்ளக் காதலன் இருந்ததால், ஆத்திரமடைந்த கள்ளக் காதலன் ஒருவன், தன் காதலியின் 5 வயது மகளைக் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பெரும்பாலான மக்கள் உயிருக்கு பயந்து தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். ஆனால், தவறை மட்டுமே குறிக்கோளாக வைத்து செல்யபடும் சிலர், எந்த நோய்த் தொற்றைப் பற்றியும் துளியும் கவலைப் படாமல், தன்னுடைய உல்லாச வாழ்க்கையிலேயே குறியாக இருந்து வருகின்றனர் என்பது மட்டும் இதன் மூலம் தெளிவாகத் தெரிய வருகிறது. சமூக பண்பாட்டையும் கடைப் பிடிப்பது இல்லை. அரசு சொல்லும் சமூக இடைவேளையையும் கடைப்பிடிப்பது இல்லை. அதனால் தான், உயிர் பழிகள் ஏற்படும் சூழல் நிலைகளும் நமக்கு ஏற்படுகிறது.