தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 2 ஆம் அலை தொற்று பரவலானது, கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்து வந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் அப்போது மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அத்துடன், கொரோனா 2 வது அலையின் பாதிப்பானது கடந்த மே மாத காலகட்டத்தில் ஒரு நாள் பாதிப்பானது 30 ஆயிரத்தையும் கடந்து காணப்பட்டது. இதனால், மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், பொது மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிப் போனார்கள். 

இந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா 2 வது தொற்று சற்று குறைய ஆரம்பித்த நிலையில், ஊரடங்குகளில் மெல்ல மெல்லத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அதிக அளவிலான தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்தது.

இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான செயல்களுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கையும் திரும்பியது. இதன் காரணமாக, பொது மக்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று வரவும், பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பொது மக்கள் மீண்டும் இயல்பாக வாழத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து காணப்பட்டது. ஆனால், தற்போது தமிழகத்தின் தலைநகர்  சென்னையில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தற்போது சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் படி, கடந்த 26 ஆம் தேதி சென்னையில் 122 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கடந்த 27 ஆம் தேதி 139 ஆக சற்று உயர்ந்து காணப்பட்டது. 

அத்துடன், தொடர்ந்து நேற்றைய தினமான 28 ஆம் தேதியும் கொரோனா பரவல் இன்னும் சற்று உயர்ந்து 164 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 

முக்கியமாக, சென்னையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருப்பது, சென்னை வாழ் மக்களிடையே பெரிதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையைத் தொடர்ந்து, கோவையில் கடந்த 26 ஆம் தேதி 164 ஆக கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. 

அத்துடன், கோவையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நேற்று இன்னும் சற்று அதிகரித்து 179 ஆக பதிவாகி உள்ளது. 

அதே போல், ஈரோட்டிலும் கடந்த 3 நாட்களை ஒப்பிடும் போது, கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் சூழலில், தற்போது சென்னை, கோவை மற்றும் ஈரோட்டில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருகிறது அந்தந்த மாவட்ட மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துக் காணப்படும் அது வேளையில், மாநிலத்தில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது குறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.