ரோட்டில் துப்பினாலோ, குப்பை போட்டாலோ ரூ.1000 அபராதம் !

ரோட்டில் துப்பினாலோ, குப்பை போட்டாலோ ரூ.1000 அபராதம் ! - Daily news

உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்திருக்கிறார் முதல்வர் யோகி ஆத்யநாத்.


பொது இடங்களுக்கு வாகனங்களில் செல்லும் போது சாலைகளில் குப்பைகளை போட்டாலோ அல்லது எச்சில் துப்பினாலோ 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.


வாகனங்களில் பயணிக்கும் போது சாலைகளில் குப்பை போடுவது மற்றும் எச்சில் துப்புவது போன்ற காரியங்களால் நகரங்களில் சுற்றுப்புற தூய்மை பாதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு மூலம் இதுபோன்ற தவறுகள் குறைக்கப்பட்டு வருங்காலங்களில், இந்த தவறை மக்கள் செய்ய மாட்டார்கள் என்று உ.பி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 


மேலும் பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்றின் தரம் மோசமடைந்து கொண்டே வருவதால், மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் உத்திர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Leave a Comment