நிலவிலிருந்து மணல் எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக திரும்பியது சீன விண்கலம் .. - போட்டி களமாக மறுகிறது நிலா!

நிலவிலிருந்து மணல் எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக திரும்பியது சீன விண்கலம் .. - போட்டி களமாக மறுகிறது நிலா! - Daily news

சீனாவின் சாங்கே-5 விண்கலம், நிலாவில் இருந்து கல், மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிவிட்டது. சீனாவில் நிலாவை பெண் கடவுளாக பார்க்கப்படுகிறது. நிலவு கடவுளை 'சாங்' என்று அழைக்கின்றனர். அதன் பெயரிலேயே தனது விண்கலத்துக்கு 'சாங்-5' என்று சீனா பெயர் சூட்டியது.


சீனாவிற்கு முன்பே நிலாவில் இருந்து கல், மண் போன்றவற்றை  அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பூமிக்குக் கொண்டு வந்து இருகின்றனர்.கடந்த 1969-ம் ஆண்டு நிலவுக்கு விண்கலம் அனுப்பிய அமெரிக்கா, தன் தேசியக் கொடியை நாட்டியது.  இதன் பிறகு 2024-ம் ஆண்டில், அமெரிக்காவும் நிலவுக்குத் தன் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு முன் நிலவில், இயந்திரங்களைக் களமிறக்க இருக்கிறது.


தற்போது நிலவில் சீனா தரையிறக்கிய சாங்-5 விண்கலத்தில் இருந்து ரோவர் இயந்திரம் மூலம் தனது தேசிய கொடியை நாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு பிறகு நிலவில் தேசிய கொடியை நாட்டு இரண்டாவது நாடாக சீனா அமைகிறது. சாங்-5 விண்கலம், நெய் மங்கோல் எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில், வியாழக்கிழமை இரவு 1.30 மணி அளவில் தரை இறங்கி இருக்கிறது.  


நிலவின் மண்ணியல் மற்றும் ஆரம்ப கால வரலாறு குறித்து அறிந்துகொள்ள உதவக்கூடும்.. நிலவை சுற்றிவரும் சுற்றுவட்டக் கலனில் இருந்து ஒரு பகுதி நிலவில் தரையிறங்கியது. 
பிறகு, நிலவின் மேற்பரப்பில் துளையிடும், அள்ளும் கருவிகள் உதவியோடு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இது 2 முதல் 4 கிலோ வரையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு கலன் மொத்தம் இரண்டு நாட்கள் மட்டுமே நிலவில் செலவழித்தது.  


அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளும் இதுவரை மொத்தம் சுமார் 400 கிலோ அளவுக்கு நிலவின் மாதிரிகளைச் சேகரித்துள்ளன. சுமாராக 3 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. ஆனால் சாங்கே - 5 கொண்டு வந்திருக்கும் நிலவின் பாறை மற்றும் மண் மாதிரிகள் மாறுபட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

Leave a Comment