பலாத்காரம் செய்யப்பட்டு 6 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“6 வயது சிறுமியிடம்.. அப்படி என்ன சுகம் கிடைத்துவிடப் போகிறது? கொலை வெறி பிடித்த காமுகனுக்கு இந்த அறிவு கூடவா இல்லை..?”

Dindugal 6 year girl raped body found dead

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி நாகேந்திரன் - பாண்டீஸ்வரி தம்பதிக்கு, 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் சஞ்சனா என்ற ஒரு மகளும் இருந்தனர்.

இதில் மகன், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5 ஆம் வகுப்பு வடித்து வரும் நிலையில், சிறுமி 
சஞ்சனா அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றைய தினம் விடுமுறை என்பதால், பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

இருவரும், வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருக்கும்போது, சிறிது நேரத்தில், தனது சக பள்ளித் தோழிகளின் வீட்டிற்குச் சென்று விளையாடி விட்டு வருவதாக அண்ணனிடம் கூறிவிட்டு,  விளையாடச் சென்ற சிறுமி 
சஞ்சனா,  வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 
  
பின்னர், மாலை நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பகுதியில், சஞ்சனா தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் கிடப்பதாக, அவரது பெற்றோருக்கு ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ஊர்மக்களே சிறுமியை மீட்டு அருகில் உள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி சஞ்சனா இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மேலும், சிறுமியின் உடலைப் பரிசோதித்தபோது, சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததாகத் தெரிகிறது. அத்துடன், சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதாகவும், அப்போது தான் சிறுமி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமி காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, சிறுமியைப் பலாத்காரம் செய்து, கொலை செய்தவனைக் கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் திருச்சி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்துபோகச் செய்தனர்.

Dindugal 6 year girl raped body found dead

இதனிடையே, வேடசந்தூர் ரெங்கனாதபுரத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களை கடும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.