60 வயது மூதாட்டி காம கொடூரர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“காதலுக்குக் கண் இல்லை என்பது போய், காமத்திற்குக் கண் இல்லை என்ற புதிய பல மொழி எழுதும் காலம் வந்துவிட்டது. அதனால் தான், இந்த காமூகர்களுக்கு 6 வயது சிறுமிக்கும், 60 வயது மூதாட்டிக்கும் வித்தியாசம் தெரியவில்லை.” 

60-year-old lady gang-raped in Thoothukudi Tamil Nadu

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்துள்ள கீழ ஈரால் கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் மனைவி பாப்பாவுக்கு 60 வயது ஆகிறது.

பாப்பா, தினமும் அவருக்குச் சொந்தமான வயல் மற்றும் தோட்டத்திற்குச் சென்று அவற்றை பராமரித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, காலையில் வழக்கம் போல் தன்னுடைய தோட்டத்திற்குப் பாப்பா சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து சென்ற சிலர், அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததைக் கண்டதும், அந்த மூதாட்டியின் வாயைப் பொத்தி, அங்கிருந்து தனியாகத் தூக்கிச் சென்றுள்ளனர்.

மறைவான இடத்திற்கு மூதாட்டியைத் தூக்கிச் சென்றதும், வயதான பெண்மணி என்று கூட பார்க்காமல், அந்த காமூகர்கள் கூட்டாகச் சேர்ந்து, மாறி மாறி அந்த மூதாட்டியை, துடிக்கத் துடிக்க பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால், அந்த மூதாட்டி வலியால் கத்தி கூச்சலிட்டுள்ளார். அந்த மூதாட்டியைக் கத்தாமல் இருக்கச் சொல்லி அவர்கள் மிரட்டி உள்ளனர். ஆனால், அவர் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்ததால், அங்குக் கிடந்த பெரிய கல்லை எடுத்து, அந்த மூதாட்டியின் தலையில் போட்டுள்ளனர்.

60-year-old lady gang-raped in Thoothukudi Tamil Nadu

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், அந்த 60 வயது மூதாட்டி பல பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப் படை அமைத்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.