நல் ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்று  சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்த தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரித்தார்.


மேலும் அவர், ‘’ குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1418 கோடி ரூபாய் செலவில் 6211 பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 5886 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 12000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில் 2000 பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும். பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய், காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தின் நீர்வள ஆதாரங்களை பாதுகாப்பதை முதன்மையாக நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் அதனால் தான் தமிழகத்திற்கு 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய நீர் விருது கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.