பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக சென்னை தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ‘’ஒரு ஆட்சி முடிவுக்கும் வரும் காலத்தில் தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் மறைமுகமாக உயரும்.


பெட்ரோல் டீசல் விலை உயர்வை தமிழக முதல்வர் கண்டித்து இருக்க வேண்டும். அதற்கு தைரியம் இல்லை எனும் போது டெல்லிக்கு சென்று காலில் விழுந்து விலையை குறைத்து இருக்க வேண்டும்.


அதிமுக-வுக்கு நன்றாக தெரியும். இனி திமுகவை வீழ்த்த முடியாது என்று. அதனால் தான் அதிமுக, திமுகவிடம் சரணாகதி அடைந்துள்ளது. திமுக வெற்றிபெற்றுவிடும் என தெரிந்து எதிர்கட்சியாக செயல்படவே அதிமுகவினர் பணியாற்றி வருகிறார்கள். 


தேர்தல் நேரத்தில் வாக்குப்பெட்டியில் கை வைக்கலாம் என பாஜக கணக்கு போடலாம். ஆனால் பெட்டியில் கை வைக்க இது உத்திரபிரதேசமோ, பீகாரோ இல்லை. இது தமிழ்நாடு. அங்கு யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு தெரியாது. ஆனால் இங்கு பட்டனை அழுத்தும்போதே யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை உறுதி செய்துவிடுவார்கள்” என்றார்.