கேரளாவில் தங்கை முறை கொண்ட பெண்ணை அடைய சதி திட்டம் தீட்டி, கணவனுக்கே மனைவியின் ஆபாச போட்டோ அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபு என்பவர், அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். 

மருத்துவர் சுபுவின் உறவினரான தங்கை முறை கொண்ட ஒரு இளம் பெண் திருமணம் செய்து கொண்டு, தனது கணவருடன் வசித்து வருகிறார். அதே போல் ஏற்கனவே திருமணமான மருத்துவர் சுபுவிற்கு, தனது தங்கை முறைகொண்ட அந்த இளம் பெண்ணின் மீது சபலமான ஆசை வந்துள்ளது. இதனால், தங்கை முறையான அந்த இளம் பெண்ணை எப்படியாவது அடைந்து விட வேண்டும் திட்டம் போட்ட அந்த மருத்துவர், அந்த இளம் பெண்ணை தான் 2 வதாக திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தார். 

இதனால், மருத்துவர் சுபு, தான் மருத்துவர் என்பதை மறந்த நிலையில், அந்த பெண்ணையும் அவரின் கணவரையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி, அந்த பெண்ணின் நடத்தை சரி இல்லை என்று, அந்த பெண்ணின் கணவருக்கு மொட்டை கடிதம் ஒன்றை அவர் எழுதிப் போட்டு உள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்து போன பெண்ணின் கணவர், மருத்துவர் சுபுவையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்து உள்ளார். ஆனால், இது அப்படியே அடங்கிப் போனது. 

இதனையடுத்து, 2 வது முயற்சியாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்களின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, அந்த இளம் பெண்ணின் ஆபாசப் படங்களை அனுப்பி வைத்து உள்ளார். இந்த விசயம் பூதாகரமாக வெடித்த நிலையில், தன்னுடைய கணவர் தான் இப்படிச் செய்திருக்கிறார் என்று தவறாக எண்ணிய அந்த பெண், தன் கணவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும், அந்த இளம் பெண் காவல் நிலையம் செல்லும் போது, மருத்துவர் சுப்புவும் கூடவே சென்று, நல்லவன் போல தன்னை கட்டிக்கொண்டுள்ளார். இதனையடுத்து, கணவன் - மனைவி இடையே பெரும் பிரச்சனை எழுந்த நிலையில், இருவரும் பிரிந்து சென்றனர். இதனால், மருத்துவர் சுப்பு மிகவும் சந்தோசம் அடைந்தார்.

ஆனால், கணவன் - மனைவி இருவரும் பிரிந்து சென்ற விசயம் போலீசாருக்கு உறுத்தலாக இருந்த நிலையில், இதனால் யாருக்கு என்ன லாபம் என்று போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், “வாட்ஸ்ஆப்பிற்கு போட்டோ அனுப்பிய எண்ணை ஆய்வு செய்து உள்ளனர். 

அப்போது, நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஆபாசப் படங்களை அனுப்பப் பயன்படுத்திய சிம் கார்டை வாங்கியது போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த நபர், குறிப்பிட்ட அந்த சிம் கார்டை தனது நண்பரும், டி.வி நடிகருமான ஜாஸ்மிர்க்கானுக்கு கொடுத்து உள்ளார். அவர் மூலமாக அந்த சிம்கார்ட், மருத்துவர் சுபுவின் கைக்கு சென்று உள்ளது. இதனையடுத்து, மருத்துவர் சுபு தான், தன் நண்பர்களின் உதவியுடன் தங்கை முறையான இளம் பெண்ணின் 

படங்களை மார்பிங் செய்து, அதை ஆபாசமாக மாற்றி, இளம் பெண்ணின் கணவருக்கும், அவரின் உறவினருக்கும் அனுப்பி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவர் சுபு, அவருக்கு உதவி செய்த டிவி நடிகர் ஜாஸ்மிர்கான் மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, பிரிந்து சென்ற கணவன் - மனைவி இருவரையும் அழைத்து போலீசார் உண்மையைப் புரிய வைத்து, பிரிந்த தம்பதிகள் இருவரையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்தனர். இதனால், அந்த பகுதி மக்கள் போலீசாரை புகழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.