தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமாக வலம் வரும் விஜய் ஆண்டனி அவரின் அடுத்த படைப்பாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. மூளை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதை சுற்றி நிகழும் சமூக அவலங்களை மையமாக உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனராகவும் படதொகுப்பாளராகவும் மற்றும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதனாலே இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவான இப்படத்தில் நடிகர்கள் காவ்யா தாப்பர், ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், ஜான் விஜய், மன்சூர் அலிகான், தேவ் கில்லி, யோகி பாபு உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் ட்ரைலர் வெளியாகி இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.

அதன்படி வரும் மே மாதம் உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் குறித்து விஜய் ஆண்டனி அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் முதன்முதலாக இயக்குனராக பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கையில், அவர்,

“ஆரம்பத்தில் ஒரு 10 நாள் கஷ்டப்பட்டேன். எனக்கு ஒரு காட்சியில் சிக்கலான நடிகர்கள் கூட்டணியில் படம் எடுத்தேன். ஜான் விஜய், ஹரிஷ், ராதாரவி சார், மன்சூர் அலிகான் சார், ஹீரோயின் இது போல நிறைய கூட்டணி காட்சிகள் எடுத்தேன். அதுல சிலருக்கு வசனம் வரவில்லை.. எல்லோரும் சரியா பேசியிருந்தா எனக்கு எளிதா ஆகிருக்கும்.. ஒருத்தருக்கு வரலன்னு திரும்பவும் அந்த காட்சியை எடுத்தேன்.. முதல் 10 நாள் அந்த இயக்குனர் என்ற ஓட்டம் வரவில்லை.. 11 வது நாள் லருந்து எனக்கு மெதுவா வர ஆரம்பிச்சுது.. நான் எழுதுன கதை ஓன்று.. ஆனா படம் ஆரம்பிச்சா வேற ஒன்று எடுத்திருப்போம்.. அதுக்கப்பறம் இந்த பார்வையில இந்த கதைய பார்க்கனும் னு முடிவு பண்ணேன். அந்த விவாதம் நமக்குள்ள நடக்கவே நேரம் எடுத்தது. இதுக்கு எனக்கு 10,11 நாள் ஆயிடுச்சு.. ” என்றார் விஜய் ஆண்டனி

மேலும் தொடர்ந்து ஒரு அறிமுக இயக்குனர் ஆகனும் என்றால் என்னென்ன திறன் தெரிஞ்சிருக்கனும்.. என்ற கேள்விக்கு, "முதல் படம் ஹிட் பண்ண எதுவும் தேவையில்லை.. நீங்க கதை மட்டும் எழுதிட்டு வந்தா போதும்.. ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் இவங்களாம் ஒழுங்கா வேலைய பண்ணா.. இயக்குனர் ஒரு ஹிட் கொடுத்திடலாம்... தொடர்ந்து நீங்க இயக்குனராகவே பயணிக்கனும் னா கண்டிப்பா திறமை தேவை.. 1,2 படம் ஹிட் கொடுத்தவங்க இப்போ காணாம போயிருப்பார்கள். அவங்களோட முதல் படம் தொழில்நுட்ப கலைஞர்களுக்காக ஹிட் ஆயிருக்கலாம். 3 வது படத்தில் இயக்குனரின் தனித்திறமை இருந்தால் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். அதனால் சினிமாவில் குறைந்த பட்சம் 3 துறையிலாவது திறன் கொண்டவராய் இருந்தால் நிலைத்து இருக்க முடியும்” என்றார் விஜய் ஆண்டனி..

மேலும் விஜய் ஆண்டனி அவர்கள் பிச்சைக்காரன் 2 திரைப்படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ.