நீருக்கடியில் படமாக்கபட்ட வெங்கட் பிரபுவின் கஸ்டடி பட மிரட்டலான ஆக்ஷன் காட்சி... மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ!

வெங்கட் பிரபுவின் கஸ்டடி பட புதிய மேக்கிங் வீடியோ,Venkat prabhu in custody movie underwater sequence making video | Galatta

சென்னை 600028 ல் தொடங்கி சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 60028 ||, மாநாடு, மன்மதலீலை வரை தொடர்ச்சியாக ரசிகர்கள் விரும்பும் செம்ம என்டர்டெய்னிங் படங்களாக 10 படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 11வது திரைப்படமாக வெளிவரவுள்ளது கஸ்டடி. தனது தொலை பயணத்தில் முதல்முறையாக நேரடி தெலுங்கு திரைப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த கஸ்டடி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் படமாக்கபட்டுள்ளது. தனது வழக்கமான பாணியில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு அழுத்தமான கதைக்களம் கொண்ட ஆக்ஷன் திரில்லர் படமாக வெங்கட் பிரபு உருவாக்கி இருக்கும் இந்த கஸ்டடி திரைப்படத்தின் மூலம் முன்னணி தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். தனது திரை பயணத்தில் 22 ஆவது திரைப்படமாக நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல இளம் நடிகை க்ரீத்தி செட்டி நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் கஸ்டடி திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ள கஸ்டடி படத்திற்கு ஒளிப்பதிவாளர் SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். 1990களில் நடப்பது போன்ற கதைக்களத்தில் நகரும் கஸ்டடி படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர். வழக்கமாக போலீஸ் படங்களில் கதாநாயகனாக இருக்கும் போலீஸ் வில்லனை அழிப்பதே மூலக்கதையாக இருக்கும். ஆனால் இந்த போலீஸ் கதையில் கடைசி வரை வில்லனை சாகவிடாமல் பார்த்துக் கொள்வதே ஹீரோவின் முதல் கடமையாக இருக்கிறது. இப்படி ஒரு வித்தியாசமான போலீஸ் படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கஸ்டடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கோடை விடுமுறையை மக்கள் கொண்டாடும் வகையில் நாளை மே 12 ஆம் தேதி கஸ்டடி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் தற்போது கஸ்டடி திரைப்படத்திலிருந்து புதிய மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நீருக்கடியில் மூழ்கியபடி நடிகர், நடிகைகள் நடிக்கும் ஒரு ஆக்சன் காட்சியை படமாக்கும் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கஸ்டடி படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்ற ஒரு காட்சியில் நாக சைதன்யா இயக்கி வரும் ஒரு மார்ச்சுவரி வேன் பாலத்தில் இருந்து விழுந்து நீருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும். அந்த வேனில் இருந்து தப்பித்து வெளியில் வரும் ஒரு முக்கிய காட்சியில் நாக சைய்தன்யா மற்றும் நடிகை க்ரீத்தி ஷெட்டி இருவரும் நீருக்கடியில் மூழ்கியபடி நடிக்கும் இந்த காட்சியின் மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மிரள வைக்கும் கஸ்டடி படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"லியோ, LCUல் இருக்கீங்களா?"- உண்மையை உடைத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பதில்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

“கண்ணை சுற்றி மட்டும் 5 எலும்பு முறிவு!”- பிச்சைக்காரன் 2க்கு முன் விஜய் ஆண்டனி சந்தித்த ஒரு மோசமான விபத்து! வீடியோ உள்ளே
சினிமா

“கண்ணை சுற்றி மட்டும் 5 எலும்பு முறிவு!”- பிச்சைக்காரன் 2க்கு முன் விஜய் ஆண்டனி சந்தித்த ஒரு மோசமான விபத்து! வீடியோ உள்ளே

சினிமா

"இது SPOILER கிடையாது!"- பிச்சைக்காரன் 2 ட்ரெய்லரின் பின்னணியில் உள்ள ரகசியங்களை உடைத்த விஜய் ஆண்டனி! ஸ்பெஷல் வீடியோ இதோ