சூப்பர் டீலக்ஸ் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த அட்டகாசமான படைப்பு... மனதை கவரும் மாடர்ன் லவ் சென்னை ட்ரெய்லர் இதோ!

தியாகராஜன் குமாரராஜாவின் மாடர்ன் லவ் சென்னை சீரிஸின் ட்ரைலர்,Thiagarajan Kumararaja anthology web series modern love chennai trailer | Galatta

தமிழ் சினிமாவில் மிகவும் குறிப்பிடப்படும் இயக்குனராக திகழும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தனது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களால் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர். அந்த வகையில் அடுத்ததாக தியாகராஜன் குமாரராஜாவின் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலஜி வெப் சீரிஸ் வருகிற மே 18ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பாக இருக்கிறது. முன்னதாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த மாடர்ன் லவ் மும்பை மற்றும் மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகிய ஆந்தாலாஜி வெப் சீரிஸ்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மாடர்ன் லவ் சென்னை வெளிவர இருக்கிறது. சென்னையை மையப்படுத்திய அழகான 6 காதல் கதைகளை கொண்ட இந்த மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி வெப் சீரிஸின் 6 எபிசோடுகளை 6 அட்டகாசமான இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். 

முன்னதாக நெட்ஃபிலிக்ஸில் வெளிவந்த பாவ கதைகள் மற்றும் நவரசா, அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த புத்தம் புது காலை மற்றும் புத்தம் புது காலை விடியாதா ஆகிய ஆந்தாலஜி வெப் சீரிஸ்களின் வரிசையில் தயாராகி இருக்கும் மாடர்ன் லவ் சென்னையின் 6 எபிசோடுகளை, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, குக்கூ, ஜோக்கர் மற்றும் கார்த்தியின் ஜப்பான் ஆகிய படங்களின் இயக்குனர் ராஜு முருகன், காதல் மற்றும் வழக்கு எண் 18/9 படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார், இயக்குனர் அக்ஷய் சுந்தர் ஆகியோர் தலா 1 எபிசோடை இயக்க, இவர்களுடன் தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஒரு எபிசோடை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாலாஜி தரணிதரன், இயக்குனர் ராஜு முருகன், ரேஷ்மா கட்டாலா, பிரதீப் குமார் S, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா ஆகியோரது கதைகளில் உருவாகி இருக்கும் இந்த ஆந்தாலஜி மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸில், அசோக் செல்வன், ரித்து வர்மா, ரம்யா நம்பீசன், கிஷோர், விஜயலட்சுமி, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், வசுந்திரா, டிஜே பானு, வாசுதேவன் முரளி, ஸ்ரீ கௌரி பிரியா, வமிக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். TYLER DURDUN AND KINO FIST  தயாரித்துள்ள மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலாஜி வெப் சீரிஸ்க்கு இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸின்  அட்டகாசமான ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. ட்ரெய்லரின் ஒவ்வொரு ஃபிரேமும் வசனங்களும் இந்த வெப்சீரிசை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகின்றன. கிட்டார் இசையோடு இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் "நெஞ்சில் ஒரு மின்னல் விளையாடும்" எனும் பாடல் அனைவரையும் வசீகரிக்கிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள மாடர்ன் லவ் சென்னை ட்ரெய்லர் இதோ…
 

9 ஆண்டுகளுக்குப் பின் மீரா ஜாஸ்மின் தமிழில் என்ட்ரி!- ரன்,ஆயுத எழுத்து வரிசையில் மாதவன் உடன் இணையும் புதிய படம்! செம்ம அப்டேட் இதோ
சினிமா

9 ஆண்டுகளுக்குப் பின் மீரா ஜாஸ்மின் தமிழில் என்ட்ரி!- ரன்,ஆயுத எழுத்து வரிசையில் மாதவன் உடன் இணையும் புதிய படம்! செம்ம அப்டேட் இதோ

சுப்ரமணியபுரம், காதல் படமெல்லாம் Miss ஆனதுக்கு அப்பாதான் காரணமா? – உண்மையை உடைத்த சாந்தனு பாக்யராஜ் – முழு வீடியோ இதோ..
சினிமா

சுப்ரமணியபுரம், காதல் படமெல்லாம் Miss ஆனதுக்கு அப்பாதான் காரணமா? – உண்மையை உடைத்த சாந்தனு பாக்யராஜ் – முழு வீடியோ இதோ..

பைக் பயணத்தை முடித்து மாஸ் காட்டிய அஜித் குமார்.. தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு – ரசிகர்கள் கொண்டாடும் அறிவிப்பு இதோ..
சினிமா

பைக் பயணத்தை முடித்து மாஸ் காட்டிய அஜித் குமார்.. தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு – ரசிகர்கள் கொண்டாடும் அறிவிப்பு இதோ..