வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் போன்ற தமிழ் சினிமா ரசிகர்களால் காலம் கடந்தும் கொண்டாடப்படும் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அடுத்த திரைப்படமாக வெளியான திரைப்படம் ‘அநீதி’. இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான ‘ஜெயில்’ திரைப்படம் ரசிகர்களிடையே விமர்சனங்களால் கொண்டாடப் பட்டது. அதன்படி தற்போது அவர் இயக்கிய வெளியாகியிருக்கும் அநீதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அட்டகாசமான திரில்லர் கதைகளத்தில் உருவாகியிருக்கும் அநீதி திரைப்படத்தின் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடிக்க அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை நாயகி துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் படத்தில் அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், பிக் பாஸ் பரணி, ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த்துள்ளனர். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் M.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், G.வசந்தபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் A.M.எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய ரவிக்குமார்.M படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் அநீதி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைத்துள்ளார். முன்னதாக ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் உருவான இப்படத்தினை திரைபடத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் தனது S பிக்சர்ஸ் சார்பில் வழங்கியுள்ளார். அதன்படி அநீதி திரைப்படம் கடந்த ஜூலை 21ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பாராட்டுகளையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்று அநீதி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு பரவாலாக கிடைத்து வருகிறது.

உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களை மையப்படுத்தியே இப்படத்தின் கதைக்கரு அமைந்துள்ளது. படத்தின் நாயகனும் ஒரு உணவு விநியோகிக்கும் தொழிலாளியாக இருக்கிறார். இந்நிலையில் சென்னையில் அயராமல் உழைத்து உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களை கவுரப் படுத்தும் வகையில் அநீதி படக்குழு அவர்களுக்காக சிறப்பு காட்சி சமீபத்தில் ஏற்பாடு செய்தது. அதன்படி ஏராளமான உணவு விநியோகிக்கும் தொழிலாளர்கள் அநீதி சிறப்பு காட்சியை கண்டு களித்தனர்.

இந்த நிகழ்வில் படக்குழுவினர்களுடன் இயக்குனர் வசந்த பாலன், நடிகர்கள் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக இயக்குனர் வசந்த பாலன் அவரது ட்விட்டர் பக்கத்தில்.

“இன்று காலை நடைபெற்ற உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கான இலவச சிறப்புக் காட்சியில் தொழிலாளர்கள் பலரும் கண்கலங்கி எங்களின் குரல்,வலி,வாழ்க்கை திரையில் வலிமையாக ஒலித்திருக்கிறது என்று நன்றி கூறினர்.” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது படக்குழுவினரின் இந்த செயல் ரசிகர்களால் பாராட்டுகளை பெற்று வைரலாகி வருகிறது.