அரசியல் - சினிமா என இரண்டிலும் நேர்த்தியாக பயணம் செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் நல்ல திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் உதயநிதி நடித்துள்ளார். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகின்றன. அடுத்ததாக தனக்கே உரித்தான பணியில் ஸ்டைலான ஆக்சன் படங்களை வழங்கி வரும் இயக்குனர் மகிழ் திருமேனி உடன் கைக்கோர்த்த உதயநிதி, கலகத் தலைவன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதிரடியான ஆக்ஷன் த்ரில்லர் படமாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி தயாரித்து நடித்திருக்கும் கலகத் தலைவன் திரைப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன் மற்றும் பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படத்திற்கு K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரலி இணைந்து இசையமைத்துள்ளனர். 

சமீபத்தில் வெளியான கலகத் தலைவன் திரைப்படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை நவம்பர் 10ஆம் தேதி கலகத் தலைவன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் சற்றுமுன் வெளியானது.

கலகத் தலைவன் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் கலகத் தலைவன் திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அசத்தலான அந்த அறிவிப்பு இதோ…