உலகளவில் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான மக்களின் காதல் தொடர்பான கட்டுரைகளை படமாக எடுத்து பிரபலாமான தொடர் ‘மாடர்ன் லவ்’ இந்த செயல்பாடு மேல்நாடுகளில் அதிகம் பேசப்பட உலகளவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. பின் இந்தியில் தெலுங்கு மொழிகளில் ‘மாடர்ன் லவ் மும்பை’, ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்’ என்ற பெயரில் இணைய தொடராக வெளியாகி டிரெண்ட் ஆனது. அதை தொடர்ந்து தற்போது தமிழில் ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற பெயரில் இணைய தொடர் உருவாகியுள்ளது. இயக்குனர்கள் பாரதி ராஜா, பாலாஜி சக்தி வேல், ராஜூ முருகன், கிருஷ்ணா குமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடரில் அசோக் செல்வன், கிஷோர், விஜயலட்சுமி, ரித்து வர்மா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த தொடர்களில் இடம் பெற்றுள்ள எபிசோடுகளுக்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளனர்.

காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள மாடர்ன் லவ் சென்னை இணைய தொடர் குறித்த முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இந்நிலையில் வரும் மே 18 அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள மாடர்ன் லவ் சென்னை தொடர் குறித்தும் தன் திரைப்பயணம் குறித்தும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இதில் மாடர்ன் லவ் சென்னை தொடரில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கப்பட்டது,

அதற்கு அவர், “எனக்கு இந்த ப்ரோஜக்ட் ல ஒரு சில பொறுப்பு இருக்கு.. நான் நியூயார்க் டைம்ஸ் வெளியான கட்டுரைகளை தேர்ந்தெடுப்பது அதை எழுத்தாளரிடம் கொடுப்பது .அவங்ககிட்ட 2,000 - 3,000 கட்டுரைகள் இருக்கு.‌ அதை தேர்ந்தெடுப்பது நான் பன்றேன்.. பின் இது இவங்ங எழுதுனா நல்லாருக்குனு நினைப்போம் ல.. சில நேரம் இது இவங்க பண்ணதில்லை அதனால இவங்க கிட்ட அது கொடுப்போம்.. உதாரணமாக 'பறவை கூட்டில் வாழும் மான்கள்' பாரதிராஜா அதை சரியாக செய்வார் என்று நினைத்து அவரிடம் கொடுத்தேன்.. அதை முடிவு செய்வது தான் என் வேலை.. இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்களுடம் ஆலோசனை கலந்துரையாடுவது.. சில நேரங்களில் என் பக்கம் சில ஐடியா கொடுக்கப்படும் ஆனால் பெரும்பாலான நேரம் அவங்க அவங்க அந்த கதையை பன்னுவாங்க ன்ற இடம் கொடுத்திருக்கேன்..” என்றார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.

மேலும் தியாகராஜன் குமாரராஜா அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோவை காண..