QR Code மூலம் பிச்சை எடுக்கும் யோகிபாபு.. கலகலப்பான காட்சியை வெளியிட்ட 'பிச்சைக்காரன் 2' படக்குழு – வைரலாகும் Glimpse இதோ..

வைரலாகும் பிச்சைக்காரன் 2 படத்தின் அட்டகாசமான சிறப்பு காட்சி இதோ.. Pichaikkaran 2 sneak peek 2 out now | Galatta

துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன்  2, வாத்தி, விடுதலை, பத்து தல ஆகிய வெற்றி படங்களின் வரிசையில் தமிழ் திரையுலகில் தற்போது எதிர்பார்பை கொண்டு தமிழ் திரையுலகில் இந்த வார சிறப்பு திரைப்படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2 Anti bikili’. தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமாக வலம் வந்த விஜய் ஆண்டனி முதல் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். மூளை மாற்று அறுவை சிகிச்சையை கதைக்கருவாக கொண்ட பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் காவ்யா தாப்பர், ராதாரவி, யோகிபாபு, மன்சூர் அலிகான், ஒய் ஜீ மகேந்திரன், ஹரீஷ் பேரடி, ஜான் விஜய், தேவ்கில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு, இசை ஆகிய பணிகளில் விஜய் ஆண்டனி செய்துள்ளார். பாத்திமா விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் முன்னதாக வெளியாகி படத்திற்கு தனி எதிர்பார்பை உருவாக்கியுள்ளது. அதையடுத்து படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் மே 19 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கான முன்பதிவில் ரசிகர்கள் மும்முரமாக இருக்கும் இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற சிறப்பு காட்சியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த காட்சியில் QR Code, Speaker மூலம் நூதனமாக பிச்சை எடுத்து கொண்டு அட்டாகாசமான கவுண்டர்களை கொடுக்கு யோகி பாபுவின் கலகலப்பான காட்சியாக அது அமைந்துள்ளது. மேலும் காட்சியின் இறுதியில் விஜய் ஆண்டனி வித்யாசமான கதாபாத்திரத்தில் வரும் காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளது. அதன்படி ரசிகர்களை கவர்ந்த இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனராக இப்படத்தின் மூலம் முதல் முறையாக களமிறங்கும் விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் பிச்சைக்காரன் 2 திரைப்படம் மேலும் ஒரு ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இவர் நடிப்பில் முன்னதாக தமிழரசன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது அப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி வள்ளி மயில், ரத்தம், கொலை, மழை பிடிக்காத மனிதன், அக்னி சிறகுகள் போன்ற பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

"உங்களுக்கெல்லாம் லேகியம் கதைதான்.." ரசிகர்கள் மீது கோபம் கொண்டு எடுத்த படம் இது தான்.. - சுவராஸ்யமான தகவலை பகிர்ந்த இயக்குனர் பாரதிராஜா..

பொன்னியின் செல்வன் 2 பட தயாரிப்பாளருக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை.. பின்னணி என்ன?
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட தயாரிப்பாளருக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை.. பின்னணி என்ன?

Piracy - ல் ‘ஃபர்ஹானா’ பார்த்து பாராட்டிய ரசிகர்.. தயாரிப்பாளர் செய்த தரமான சம்பவம்.. -  இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

Piracy - ல் ‘ஃபர்ஹானா’ பார்த்து பாராட்டிய ரசிகர்.. தயாரிப்பாளர் செய்த தரமான சம்பவம்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..