இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11 பொங்கலையொட்டி வெளியான திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷியாம், யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். குடும்பங்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வாரிசு திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக உலகளவில் 250 கோடிக்கு மேல் தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. ஒளிப்பதிவாளர் தமன் இசையில் வாரிசு திரைப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து ‘ஜிமிக்கி பொண்ணு’, ‘தீ தளபதி’, ‘Celebration of Varisu’, ‘soul of varisu’ ஆகிய பாடலின் வீடியோ வெளியானது. இந்நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தமன் இசையில் விஜய் மற்றும் மானசி பாடியுள்ள இந்த பாடல் முன்னதாக பாடல் வடிவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இணையத்தில் 170 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த பாடலின் வீடியோ வெளியானது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இப்பாடலில் ஜானி மாஸ்டர் நடன வடிவமைப்பில் கடைசி 1.20 நிமிடம், தளபதி விஜய் ஒரே டேக்கில் ஆடியிருப்பதாக கூறி எதிர்பார்ப்பை முன்னர் எகிற வைத்தனர். அதன் படி திரையில் அந்த பகுதியில் ரசிகர்களின் விசில் பறந்து ஆரவார கொண்டாட்டம் நிகழ்ந்தது. தற்போது அந்த வீடியோ வெளியானதால் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்து அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.