பட்டையை கிளப்பும் வாத்தி பட பாடல்கள்.. ஜிவி பிரகாஷ் பகிர்ந்த Good News.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..

10 மில்லியன் பயனர்களை கடந்த வாத்தி பட பாடல்கள் - GV prakash shares Vaathi Movie song reaches 10 million | Galatta

தனுஷ் ஆசிரியாக நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘வாத்தி  சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படத்தை இயக்குகிறார் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி. கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகவிருக்கின்றன. இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சம்யுக்தா மேனன் கதாநாயகியாகவும் சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர்  ஜே.யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வாத்தி படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது மேலும் வாத்தி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்தின் சில பாடல்கள் டீசர் முன்னதாக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நிகழ்ந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள், கலைஞர்கள் பங்கு பெற்றனர். ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. மேலும் பாடல்கள் இணையத்தில் அன்று மாலை 6 மணிக்கு இணையத்திலும் வெளியிடப்பட்டது. ஐந்து பாடல்கள் கொண்ட தொகுப்பாக உள்ள வாத்தி ஆல்பத்தில் வா வாத்தி, நாடோடி மன்னன்,கலங்குதே,One Life, சூரிய பறவைகளே ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான பாடல்கள் கேட்கும் படியும் ரசிக்கும் படியும் வெளியான போதே நல்ல கருத்துகளை பெற்றது. இந்நிலையில் தற்போது பாடல் வெளியாகி இரண்டு நாட்கள் நிறைவடைந்த நிலையில் பாடல் குறித்து good news ஐ வெளியிட்டார், அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார். வாத்தி பட பாடல்கள் spotify என்ற பாடல் தளத்தில் மட்டும் இதுவரை 1 கோடியே  70 லட்ச பயனர்களை கொண்டுள்ளது.  இதுகுறித்து ஜிவி பிரகாஷ்,

Spotify தளத்தில் வாத்தி பட பாடல்கள்  1 கோடியே 70 லட்ச பயனர்களை கொண்டுள்ளது. மிகப்பெரிய விஷயத்தை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றிஎன்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் உற்சாகத்தில் ஜிவி பிரகாஷ் குமார் பதிவினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

1 crore and 70 lakh streams and listens for #vaathi audio on @Spotify @spotifyindia … thank you all for making it big … @dhanushkraja @SitharaEnts #venkyatluri @adityamusic pic.twitter.com/l6aY7vsRqg

— G.V.Prakash Kumar (@gvprakash) February 6, 2023

'Gangstaa 2.0' துணிவு படத்தின் வெளிவராத பாடல்.. - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பிரபலம்.. வைரலாகி வரும் Special Video இதோ..
சினிமா

'Gangstaa 2.0' துணிவு படத்தின் வெளிவராத பாடல்.. - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பிரபலம்.. வைரலாகி வரும் Special Video இதோ..

சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவிற்கு விபத்து.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்
சினிமா

சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவிற்கு விபத்து.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்

எப்புட்றா... 'லியோ' திரைப்படத்தில் விஜய், திரிஷா கூட்டணியில் இப்படி ஒரு ஒற்றுமையா? - உற்சாகத்தில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலான பதிவு..
சினிமா

எப்புட்றா... 'லியோ' திரைப்படத்தில் விஜய், திரிஷா கூட்டணியில் இப்படி ஒரு ஒற்றுமையா? - உற்சாகத்தில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலான பதிவு..