தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு 'வாரிசு' திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், வாரிசு படத்தின் இந்தி ரீமேக் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் 'வாரிசு'. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத் குமார், குஷ்பூ, ஷ்யாம், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

பிரவீன் கே.எல். இதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் கார்த்திக் பழனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திலிருந்து 'ரஞ்சிதமே', 'தீ தளபதி', 'Soul of Varisu' உள்ளிட்ட பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத் குமார், குஷ்பூ, ஷ்யாம், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகளைப் பற்றிய உணர்வுப்பூர்வமான படமாக வாரிசு உருவாகியுள்ளதாக, இதில் விஜயின் சகோதரராக நடித்துள்ள தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால், வாரிசு படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஆவலுடன் பலரால் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்திசெய்யும் விதமாக மாஸ் காட்சிகளுடனும் தெறிக்கவிடும் வசனங்களுடனும் டிரெய்லர் அமைந்திருந்தது. வில்லனுடனான தொழிற்போட்டி காரணமாக விஜயின் குடும்பம் பிரச்சினைகளுக்கு உள்ளாவதையும், விஜய் அந்த பிரச்சினைகளை எப்படி கையாள்கிறார் என்பதையும் பற்றி படம் பேசுவதுபோல் டிரெய்லர் அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வரை டிரெய்லர் யூடியூபில் 26 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், வாரிசு பட இந்தி ரீமேக்கின் அதிகாரப்பூர்வ பெயர் இணையத்தில் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் நிலையில், தற்போது இந்தி மொழி குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

தகவல்களின் அடிப்படையில், விஜயின் வாரிசு படத்தை மனிஷ் ஷாவின் 'GoldMine TeleFilms' நிறுவனம் இந்தியில் வெளியிடவுள்ளதாகவும், அனில் ததானியின் AAFilms நிறுவனம் இப்படத்தை இந்தியில் விநியோகிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிறுவனமானது 'கே.ஜி.எஃப்.2' மற்றும் 'புஷ்பா' படங்களை இந்தியில் விநியோகம் செய்த நிறுவனமாகும்.

பொதுவாக விஜயின் படங்கள் ஒரு மொழியில் தயாரானால் அதன் வெளியீட்டிற்குப் பின்னரே இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் ஆகும். ஆனால் வாரிசு படம் வெளியீட்டிற்கு முன்னமே இந்தியில் ரீமேக்காவது வட இந்திய விஜய் ரசிகர்களிடையே ஆவலைத் தூண்டியுள்ளது.