தனக்கே உரித்தான ஸ்டைலில் ரசிகர்கள் விரும்பும் ப்ளாகபஸ்டர் திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் தனிக்கரற்ற கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் தளபதி விஜய் அவர்கள், மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உபன் இணையும் தளபதி 67 திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். வரும் டிசம்பர் மாதம் முதல் தளபதி 67 திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்த ரஞ்சிதமே பாடல் பட்டித்தொட்டி எங்கும் பாட்டை கிளப்பி வைரல் ஹிட் ஆனது. இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு வெர்ஷன் நாளை நவம்பர் 30ஆம் தேதி காலை 9:09 மணிக்கு வெளியாகும் என தற்போது பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.