அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் தமிழ் திரை உலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும் விளங்கும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் வெளியீடாக 2023-ஆண்டு ஜனவரில் ரிலீஸாகவுள்ளது. அதே சமயத்தில் அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீசாக இருப்பதால் இந்த பொங்கலை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீமன், ஸ்ரீகாந்த், ஷியாம் ஆகியோர் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைக்கிறார். முன்னதாக வெளிவந்த வாரிசு படத்தின் முதல் பாடலாக வெளிவந்த ரஞ்சிதமே பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட்டாகி இதுவரை யூட்யூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட்டாடியுள்ளது.

வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்த தளபதி விஜயின் டாப் ஹிட் பாடல் தயாராகி வருவதாகவும் பெல்லாரியில் அசத்தலான லொகேஷன்களில் அது படமாக்கப்பட்டுள்ளதாகவும் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே தளபதி விஜய்யின் அடுத்த ஹிட் பாடலுக்காக தற்போது ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.