ரிலீசுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படம் பக்கா ஆக்சன் படமாக வருகிற வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜய் உடன் லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுனனின் கதாபாத்திரங்களான ஆண்டனி தாஸ் , ஹெரால்டு தாஸ் உடன் லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்திருக்கிறார் என தெரிகிறது. ட்ரெய்லரில் "பார்த்தி" என்ற பெயரில் தளபதி விஜயின் கதாபாத்திரம் குறிப்பிட்டு இருப்பதால் இது இரட்டை வேடமா அல்லது தலைமறைவான வாழ்க்கையா என ரசிகர்கள் பதில் பல சுவாரஸ்யமான கேள்விகள் எழுந்துள்ளன. முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. இதுவரை தென்னிந்திய திரையுலகில் எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு, தளபதி விஜய்யின் திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் இப்படத்தை வெளியிட முடிவு செய்த பட குழுவினர் 25000 முதல் 30000 திரையரங்குகள் வரை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

வட இந்தியாவில் மட்டும் 2000 திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் சர்ப்ரைசாக தென்னிந்தியாவில் லியோ திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற இருப்பதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக தளபதி விஜயின் லியோ பட ப்ரமோஷன் ஒரு பகுதியாக தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் லியோ திரைப்படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் தயாராகி விட்டனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் X பக்கத்தில், “நாங்க ரெடி தான் வரவா… விரைவில் நம்ம ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் & இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்” எனக் குறிப்பிட்டு இருவரும் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வெளியிட்டுள்ளது. அனேகமாக நாளை அக்டோபர் 14ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்தியா VS பாகிஸ்தான் போட்டியில் தளபதி விஜயின் லியோ பட ப்ரோமோஷன் இடம் பெறும் என்றும் கமெண்ட்ரி பாக்ஸில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. அது குறித்த அறிவிப்பு இதோ…