கொடைக்கானலில் தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பிரம்மாண்ட படம்... படப்பிடிப்பு குறித்து படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நயன்தாராவின் மண்ணாங்கட்டி பட ஷூட்டிங் கொடைக்கானலில் ஆரம்பம்,lady super star nayanthara in mannangatti movie shoot starts in kodaikanal | Galatta

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் புதிய திரைப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பமானது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை நயன்தாரா நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், O2 மற்றும் கனெக்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் லூசிபர் ரீமேக்காக காட் பாதர், மலையாளத்தில் பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுடன் இணைந்து கோல்ட் உள்ளிட்ட படங்களில் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து முதன்முறை ஹிந்தி சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கிய நடிகை நயன்தாரா கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஜவான் திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடிக்கு மேல் வசூலித்தது. 

அடுத்ததாக மலையாளத்தில் “திரிஷ்யம்” பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ராம் பார்ட் 2 படத்தில் நடிக்க இருக்கும் நடிகை நயன்தாரா தற்போது தமிழில் டெஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சசிகாந்த் அவர்கள் முதன்முறை இயக்குனராக களமிறங்கும் டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் 75வது திரைப்படமாக உருவாகும் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்க நயன்தாராவின் திரைப் பயணத்திலேயே பிரம்மாண்டமான படைப்பாக உருவாகும் இந்த லேடிஸ் சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தில் நடிகை ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் நயன்தாரா நடிப்பில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் திரைப்படம் தான் மண்ணாங்கட்டி Since 1960. இயக்குனர் DUDE விக்கி எழுதி இயக்கும் இந்த மண்ணாங்கட்டி Since 1960 திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னணி ஒளிப்பதிவாளர் RD.ராஜசேகர் ஒளிப்பதிவில் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த மண்ணாங்கட்டி Since 1960 படத்திற்கு மிலன் கலை இயக்குனராக பணியாற்ற , மதன் கணேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் இந்த மண்ணாங்கட்டி Since 1960 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பிரம்மாண்டமான படைப்பாக உருவாகும் இந்த மண்ணாங்கட்டி Since 1960 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் ஆரம்பமாகி இருக்கிறது கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Shooting of Lady Superstar #Nayanthara's #MANNANGATTIsince1960 - starts off today on a grand scale in Kodaikanal.

Produced by Prince Pictures. @lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @RDRajasekar @rseanroldan @MilanFern30 @ganesh_madan @itshravanthi @paalpandicinemapic.twitter.com/XfyRPw81iB

— Prince Pictures (@Prince_Pictures) October 12, 2023