ரிலீசுக்கு முன்பே ALL TIME RECORD செய்த தளபதி விஜயின் லியோ... முதல் நாள் பாக்ஸ் ஆபீஸில் இமாலய சாதனை! வேற லெவல் அறிவிப்பு இதோ

UKவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய படமாக லியோ சாதனை,vijay in leo day one uk box office all time record for any indian film | Galatta

ரிலீசுக்கு முன்பே சாதனைகளை தொடங்கிய தளபதி விஜயின் லியோ திரைப்படம் UKவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற மிரட்டலான புதிய சாதனையை தற்போது படைத்திருக்கிறது. மக்களின் மனம் கவர்ந்த நாயகராக திகழும் தளபதி விஜயின் பக்கா ஆக்சன் ட்ரீட்டாக லியோ திரைப்படம் அடுத்த சில தினங்களில் வெளிவர இருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஜோடியான தளபதி விஜய் - திரிஷா ஜோடி கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் இந்த லியோ திரைப்படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் திரிஷாவுடன் இணைந்து சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாஃபர் சாதிக், மாயா கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத அளவிற்கு மிரட்டலான ஒரு ஆக்சன் காட்சியாக CG உதவியுடன் அட்டகாசமான ஒரு கழுதை புலி சண்டை காட்சியும், மிகவும் விறுவிறுப்பான ஒரு சேசிங் காட்சியும் ரசிகர்களுக்கு விருந்தாக லியோ திரைப்படத்தில் காத்திருக்கிறது. தொடர்ந்து தனது பாணியில் அசத்தலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள லியோ திரைப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். மாநகரம் படத்திலிருந்து தொடர்ச்சியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் எல்லா படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றிய சதீஷ்குமார் அவர்கள் லியோ படத்திலும் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தினேஷ் மாஸ்டர் நடன இயக்கத்தில் அன்பறிவு மாஸ்டர்களின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த லியோ திரைப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ திரைப்படத்திற்கான 4AM சிறப்பு காட்சிக்கான அனுமதியையும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்காக காத்திருக்கின்றனர். முன்னதாக UKவில் ரிலீசுக்கு ஆறு வாரங்களுக்கு முன்பே லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கப்பட்ட இதுவரை 50 ஆயிரம் மேற்பட்ட டிக்கெட்டுகள் பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படம் ரிலீசுக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கும் சூழலில் முன்பதிவிலேயே முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த இந்திய படமாக அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்து ஆல் டைம் ரெகார்ட் செய்து மிரட்டலான சாதனை படைத்திருப்பதாக UKவில் லியோ திரைப்படத்தை வெளியிடும் அஹிம்ஷா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ...
 

We've just rewritten the history books! #LEO's Day 1 UK box office now stands as the ALL TIME RECORD for any Indian film. A roaring applause for Thalapathy Vijay! ❤️🔥💣💥

And the party’s not over — let’s celebrate with the teaser of our rap track, #ANNANADHIRADI at 7PM IST! 🎶 pic.twitter.com/daIDhNdOVg

— Ahimsa Entertainment (@ahimsafilms) October 13, 2023