"வெடிக்கும் சினிமா அனுபவத்திற்கு ரெடியாகிக்கோங்க!"- தளபதி விஜயின் லியோ பட ரிலீஸ் பற்றி படக்குழு கொடுத்த மிரட்டலான அப்டேட்!

தளபதி விஜயின் லியோ பட ரிலீஸ் பற்றி படக்குழு கொடுத்த அப்டேட்,thalapathy vijay in leo movie releasing in imax | Galatta

வெடிக்கும் மிரட்டலான அனுபவத்திற்கு ரெடியாகிக்கோங்க என ரசிகர்கள் அனைவரையும் அலர்ட் செய்யும் விதமாக தளபதி விஜயின் லியோ படக்குழு அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  மாஸ்டர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக லியோ திரைப்படம் வெளிவர இருக்கிறது. தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாஃபர் சாதிக், மாயா கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தினேஷ் மாஸ்டர் நடன இயக்கத்தில் அன்பறிவு மாஸ்டர்களின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். முதல்  அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே பெரிய ஹைப்பை ஏற்படுத்திய படமான இந்த லியோ திரைப்படம் நாளுக்கு நாள் இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள், VFX பணிகள் அனைத்தும் நிறைவடைந்து சென்சாரையும் 15 நாட்களுக்கு முன்பே முடித்து ரிலீசுக்கு தயாராகி விட்டது லியோ படம். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த லியோ திரைப்படத்தில் அதையும் தாண்டி ஆக்ஷனில் மற்றொரு சர்ப்ரைஸ் விஷயமாக பனி நிறைந்த காஷ்மீரின் காட்டுப் பகுதிக்குள் கழுதைப்புலியுடன் தளபதி விஜய் சண்டையிடும் அதிரடியான ஒரு ஆக்சன் காட்சி படத்தில் இடம் பெற்று இருக்கிறது. தளபதி விஜயின் திரைபயணத்திலேயே இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பிய இந்த லியோ திரைப்படம் இதுவரை வெளிவந்த அவரது திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமாக உலகம் முழுக்க மிகப்பெரிய அளவில் வெளியாகும் திரைப்படம் என்ற அந்தஸ்தையும் பெற்று இருக்கிறது. குறிப்பாக ஆறு வாரங்களுக்கு முன்பே லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இங்கிலாந்து மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டு இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. 

இந்த நிலையில் ரசிகர்களுக்கு மேலும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக லியோ பட குழுவினர் அட்டகாசமான புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியேற்றுள்ளனர். இந்த ஆயுத பூஜைக்கு பக்கா ஆக்சன் ட்ரீட்டாக வெளிவர இருக்கும் இந்த லியோ திரைப்படத்தின் மற்றொரு விஷுவல் ட்ரீட்டாக படத்தை IMAX தொழில் நுட்பத்தில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதிரடியான புதிய போஸ்டர் உடன் வந்த இந்த IMAX ரிலீஸ் ஸ்பெஷல் அறிவிப்பு இதோ...
 

Get ready for an explosive cinematic blast, there’s no holding back 💣
We're taking your cinematic experience to new heights by bringing #Leo (Tamil) to #IMAX 🔥@IMAX #IMAXIndia#LeoInIMAX #LeoFromOctober19#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrasherspic.twitter.com/cgkjzkudtf

— Seven Screen Studio (@7screenstudio) October 12, 2023