தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் லியோ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ஆறு வாரங்களுக்கு முன்பே தொடங்கி இருப்பதாக முன்னணி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகரான தளபதி விஜய் அடுத்ததாக முதல்முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிகில் படத்திற்கு பின் தளபதி 68 படத்தை தயாரிக்கிறது. இந்த தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வருகிறது லியோ திரைப்படம்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் சஞ்சய் தத்தின் ஆண்டனி தாஸ் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுனின் ஹெரால்டு தாஸ் ஆகிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் வெளிவந்த GLIMPSE வீடியோக்கள் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இதுவரை எந்த இந்திய திரைப்படத்திற்கும் இல்லாத அளவில் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டிருப்பதாக UK-வில் லியோ திரைப்படத்தை வெளியிட்டு இருக்கும் அஹிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. UK மட்டுமல்லாது இன்னும் பிற இடங்களிலும் விரைவில் லியோ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் UKவில் உள்ள ODEON சினிமாஸ் நிறுவனம் தனது முன்பதிவு தொடங்குவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அஹிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட்ட அதிரடியான அந்த அறிவிப்பு இதோ…