தொடர்ந்து அலப்பறை கிளப்பி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் Spotify-யில் அட்டகாசமான சாதனை படைத்திருக்கிறது. என்றென்றும் மக்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் நபிப்பில் அடுத்தடுத்து லால் சலாம், ஜெய் பீம் பட இயக்குனருடன் ஒரு புதிய படம் என வரிசையாக வெளிவர இருக்கின்றன. இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக கொடுத்துள்ளார். மற்றொரு மிகப்பெரிய பலமாக இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் தனது பின்னணி இசையலும் பாடல்களாலும் அரங்கை அதிர வைத்தார். ரிலீசான நான்கு நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே 105 கோடி வரை ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வசூலித்தது. இந்த நிலையில் உலக அளவில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் வார வசூல் விவரம் தற்போது வெளியானது. முதல் வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் 375.40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிகபட்சமாக வசூலித்த படம் ஜெயிலர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரசிகர்கள் ரிப்பீட் மோட்டில் ஜெயிலர் திரைப்படத்தை கொண்டாடி வருவதால் வரும் நாட்களில் இன்னும் பல வசூல் சாதனைகள் செய்து இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் பாடல்கள் தற்போது அதிரடியான புதிய சாதனை படைத்திருக்கிறது. ஏற்கனவே அனிருத் இசையில் வெளிவந்த ஜெயிலர் பாடல்கள் எல்லாம் டிரெண்டிங் ஹிட்டடித்தன. காவாலா பாடல் வெளிவந்த சில நாட்களிலேயே Youtube-ல் 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது அதேபோல் ரசிகர்களின் VIBEக்கு ஏற்ற மாதிரி வந்த ஹுக்கும் பாடல் ரிலீசுக்கு முன்பும் பின்பும் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரட் பாடலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் Spotify-யில் ஹுக்கும் பாடல் இந்திய அளவில் டாப் பாடல்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் டாப் பாடல்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த முதல் தென்னிந்திய பாடல் ஹுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி இந்தியா அளவில் டாப் ஆல்பங்களில் பட்டியலிலும் ஜெயிலர் படத்தின் ஆல்பம் முதல் இடத்தை பிடித்து அதிரடி சம்பவம் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…

India full-ah #Jailer alapparai-dhan!#Jailer album - #1 in Spotify Top Albums India 💥🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @mirnaaofficialpic.twitter.com/iE831mY0EH

— Sun Pictures (@sunpictures) August 19, 2023