"நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் உண்மையான கிங்!"- சென்னையில் கிங் ஆஃப் கொத்தா பட விழாவில் பேசிய துல்கர் சல்மான்!

ரஜினிகாந்த் தான் உண்மையான கிங் என பேசிய துல்கர் சல்மான்,Dulquer salmaan about rajinikanth in king of kotha pre release event | Galatta

சென்னையில் நடைபெற்ற தனது கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் பேசிய துல்கர் சல்மான் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கிங் என குறிப்பிட்டு பேசியிருக்கிறார். மலையாள சினிமாவில் நடிகராக களமிறங்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் மிக முக்கிய நடிகராக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழ்பவர் துல்கர் சல்மான். அந்த வகையில் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் தான் கிங் ஆஃப் கொத்தா. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் மலையாளத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் PAN INDIA படமாக வெளிவர இருக்கிறது. 

தனது திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் 1980களில் நடைபெறும் கதைக்களத்தில் அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள இப்படத்தில் அவருடன் இணைந்து நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிங் ஆப் கொத்தா படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, ஷம்மி திலகன், அனிகா சுரேந்திரன், நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, சுதி கொப்பா, செந்தில் கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் ஷர்மா மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக அசத்திய சபீர் கல்லாரக்கல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை ரித்திகா சிங் கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷியாம் சசிதரன் படத்தொகுப்பு செய்துள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் பாடல்களுக்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்க, ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை சேர்த்துள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை பரிசாக துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பெரிய மாலில் கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துல்கர் சல்மான், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் குறித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்தும் பேசினார் அப்படி பேசுகையில்,

“நம்ம கிங் ஆஃப் கொத்தா வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதி திரையரங்குகளுக்கு வருகிறது நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி சார் உடைய ஜெயிலர் படம் உலகம் முழுக்க மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. யார் உண்மையான கிங் என அவர் நமக்கு காட்டிவிட்டார். திரையரங்குகளில் மக்கள் படையெடுத்து வருகின்றனர். அதில் ஒரு சதவீத கூட்டம் நம் படத்திற்கு வந்தால் அதுவே ஒரு பெரிய விஷயம். "

என பேசி இருக்கிறார்.